தமது சுயலாபத்திற்காக இலங்கை தமிழர் விவகாரத்தை கையிலெடுக்கும் தமிழக அரசியல் தலைவர்கள்
இலங்கையில் உள்ள தமிழர் பிரச்சனையை தமிழக அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தி வருவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினமலர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘‘இலங்கையில் உள்ள தமிழர் பிரச்னையை தமிழக அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துகிறார்களா?’’ என்ற கேள்விக்கு 92.8 சதவீதம் பேர் ஆம் என பதிலளித்துள்ளனர். 7.2 சதவீதம் பேர் அந்தக் கேள்விக்கு “இல்லை” என்று பதிலளித்துள்ளனர். இலங்கையில் முப்பது ஆண்டுகளாக […]