பொழுதுபோக்கு

சூர்யாவின் புதிய லுக் : இணையத்தை தெறிக்க விடும் இரசிகர்கள்!

  • May 26, 2023
  • 0 Comments

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் கங்குவா. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் இப்படத்தில் இடம்பெறும் சூரியாவின் புதிய லுக் வெளிவந்து வைரலாகி வருகிறது. வரலாற்று படமாக எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் கெட்டப்பிற்காக சூர்யாவின் ஜிம் ஒர்க் அவுட் போட்டோ அண்மையில் வெளிவந்து சோசியல் மீடியாவை ஆக்கிரமித்திருந்தது. இந்நிலையில், தற்போது மற்றுமோர் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சூர்யாவின் ட்ரெண்டிங் ஆன தாடி லுக் ரசிகர்களை கவர்ந்து […]

ஆசியா

சீனாவை ஆட்டி படைக்க வரும் மரபணுமாற்றமடைந்த கொவிட் தொற்று!

  • May 26, 2023
  • 0 Comments

புதிய மரபணு மாற்றப்பட்ட கோவிட் XBB  சீனாவை அச்சுறுத்தி வருகிறது. வாரம்தோறும் ஆறரைக் கோடி பேர் வரை இந்த புதிய வகை தொற்றால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஜூன் இறுதிக்குள் இது உச்சத்தை எட்டி சீனாவை ஆட்டிப் படைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்காக சீன அரசு இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய வகை தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் முதல் சீனா ஒமிக்ரான் மரபணு மாற்ற  XBB   வைரஸ் தொற்றின் பரவலை […]

இந்தியா

பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி பெண் ஒருவர் பலி!

  • May 26, 2023
  • 0 Comments

பிரபல யூடிபர் இர்பான் கார் மோதி பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே நடந்த இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மிகப்பிரபலமான யூடியூபர் முகமது இர்பான் சென்னையை சேர்ந்தவர். இவர் இர்ஃபான்ஸ் வியூ என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருடைய யூடியூப் செனலில் 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் சென்றபோது இவருடைய கார் விபத்தில் சிக்கியதாக கூறுப்படுகிறது. […]

ஆசியா

மலேசியாவில் தோட்டப்பகுதியில் இருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

  • May 26, 2023
  • 0 Comments

மலேசியாவில் சிலாங்கூர், சுங்கை பெசாரில் உள்ள பாமாயில் தோட்டப் பகுதியில் எரிந்தநிலையில், பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் குறித்த பெண்ணை அழைத்துக்கொண்டு, தோட்டப்பகுதிக்கு காரில் சென்றதாக தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபரும் கொலை செய்யப்பட்ட பெண்ணும் கடந்த ஒருவருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த பெண் கருவுற்றுள்ளார். இதனையடுத்து கர்பத்தை […]

இலங்கை

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் , 239 கொலை சம்பவங்கள் பதிவு!

  • May 26, 2023
  • 0 Comments

இலங்கையில் இந்த வருடத்தின் இது வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், 06 பேர் காயமடைந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன் 2019 ஆம் ஆண்டில் 273 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வருடத்தின் 146 நாட்களுக்குள் மாத்திரம் 239 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இவ்வாறான […]

ஆசியா

ஜப்பானில் 6.1ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

  • May 26, 2023
  • 0 Comments

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மதியம் 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் சுமார் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை

பொழுதுபோக்கு

விஜயின் தந்தையாக நடித்த பிரபல வில்லனுக்கு திருமணம்!! எனக்கு 60.. உனக்கு 50..!

  • May 26, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்ற ஆஷிஷ் வித்யார்த்தி திருமணம் முடித்த விடயம் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது. 1990-களில் இருந்து ஹிந்தி திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி. ஹிந்தியை தொடர்ந்து, தெலுங்கு, பெங்காலி போன்ற மொழிகளிலும் நடிக்க துவங்கிய இவர், தமிழில் 2001-ம் ஆண்டு, தரணி இயக்கத்தில் வெளியான தில் திரைப்படத்தின் மூலம் முரட்டு போலீசாக அறிமுகமானார். தமிழில் இவர் நடித்த […]

இலங்கை

இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க தயாராகும் ரஷ்யா‘!

  • May 26, 2023
  • 0 Comments

இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால்,  நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதற்கு தேவையான நிதி […]

தென் அமெரிக்கா

வயதில் மூத்த ஆணுடன் சிறுமிக்கு தவறான உறவு… 19 பேர் பலியான சம்பவத்தில் வெளிவந்த உண்மை

  • May 26, 2023
  • 0 Comments

தன்னை விட வயதில் மிகவும் மூத்த ஆண் ஒருவருடன் ஒரு 14 வயது சிறுமி தவறான உறவில் இருந்ததை அறிந்த அவளுடைய ஆசிரியர்கள், அவளது மொபைல் போனைப் பறித்துள்ளனர். தென் அமெரிக்க நாடாகிய கயானாவில், 14 வயதுள்ள சிறுமி ஒருத்தி தன்னை விட வயதில் மிகவும் மூத்த ஆண் ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்தது தெரியவந்ததால், அவளது ஆசிரியர்களும், ஹாஸ்டல் வார்டனும் அவளைக் கண்டித்துள்ளனர். அவளைத் தண்டிக்கும் வகையில், அவர்கள் அவளுடைய மொபைல் போனைப் பறித்துள்ளார்கள். கோபமடைந்த […]

இலங்கை

இலங்கையில் நெருக்கடியான நிலையை எட்டிய மருந்து தட்டுப்பாடு பிரச்சினை!

  • May 26, 2023
  • 0 Comments

நாட்டில் மருந்துதட்டுப்பாடு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளதாகவும், அரசாங்கம் இந்த விடயத்தை அலட்சியம் செய்வதாகவும் இலங்கையின் மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன. அரசாங்கவைத்தியசாலைகளில் சில மருந்துகளிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என இலங்கை மருத்துவசங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரட்ண தெரிவித்துள்ளார். குறிப்பாக மருத்துவநிலையங்களில் மருத்துவர்கள் நோயாளிகளை வெளியில் மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் மருந்துகளின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் நோயாளர்கள் சிலர் மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். […]

You cannot copy content of this page

Skip to content