உலகம்

சோமாலியாவில் 20 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான சோமாலியாவில் அல் ஷபாப், ஐஎஸ், அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுவை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான நடவடிக்கையில் சோமாலியாவுக்கு உகாண்டா பாதுகாப்பு படையினரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் ஷபிலி நகரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் அல்ஷபாப் பயங்கரவாதிகள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இலங்கை

இலங்கையில் வாகனங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் பயன்படுத்திய கார்களின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது என வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிபொருள் விலை சரிவு மற்றும் டாலரின் மதிப்பு குறைவதே இதற்கு காரணம் என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், வாகன உதிரி பாகங்கள், வாகன பராமரிப்பு (சேவை) கட்டணம், காப்பீட்டு கட்டணம் மற்றும் குத்தகை கட்டணம் ஆகியவற்றில் இருந்து மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை என்று வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது, […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் அர்ச்சகர் உயிரிழப்பு!

ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் அர்ச்சகர் உயிரிழந்துள்ளார். நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

இலங்கை

மசாஜ் நிலையம் என இயங்கிய விபச்சார விடுதி! – 12 யுவதிகள் கைது

கடுவெல நகரில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளாகச் செயற்பட்ட 4 இடங்கள் சுற்றிவளைக்கபப்ட்டு 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் 12 பெண்கள் உட்பட 16 பேரைக் கைது செய்ததாக கடுவெல காவல்துறையினர் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில் கடுவெல காவல் நிலையப் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் வீரசிங்கவின் பணிப்புரையின் பேரில் நீதிமன்றத்தில் பெறப்பட்ட அனுமதியுடன் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களில் 12 பெண்களும், விடுதிகளின் முகாமையாளர்களாக பணியாற்றிய நான்கு ஆண்களும் […]

இந்தியா

300 அடி ஆழ்துளை குழிக்குள் விழுந்த இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக பலி!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்துள்ளது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். . பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்தது. இரவு, பகல் பாராமல் மீட்பு பணி மேற்கொண்டனர். […]

பொழுதுபோக்கு

மலேசியாவில் சுற்றிவளைக்கப்பட்ட விஜய் சேதுபதி!! நடந்தது என்ன?

  • June 8, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவர். பல தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது ‘மும்பைகார்’, ‘மெர்ரி கிறிஸ்மஸ்’, ‘ஜவான்’ ஆகிய படங்களின் மூலம் பாலிவுட்டில் திரையுலகில் கலக்கி வருகிறார். நடிகர் ஆறுமுககுமார் இயக்கிய தனது 51வது படத்தின் வெளியீட்டு விழாவிற்காக மலேசியா சென்றிருந்தபோது சமீபத்தில் அங்கு பொது வெளியில் காணப்பட்டார்.   இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது, மேலும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை படக்குழுவினர் […]

ஐரோப்பா

பெலாரஸ் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் பிரித்தானியா!

  • June 8, 2023
  • 0 Comments

பெலராஸ் மீதான புதிய பொருளாதாரத் தடைகளைக பிரித்தானியா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எளிதாக்குவதில் பெலாரஸ் பங்களிப்பு வகித்தமைக்காக இங்கிலாந்து மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இறக்குமதி தடைகள், இணையப் பிரச்சாரத்தைத் தடுக்கும் நோக்கில் புதிய தடைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெலாரஸிலிருந்து தங்கம், சிமென்ட், மரம் மற்றும் ரப்பர் இறக்குமதியைத் தடை செய்வதும், பிரிட்டனில் இருந்து பெலாரஸுக்கு ரூபாய் நோட்டுகள் மற்றும் இயந்திரங்கள், இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் […]

இந்தியா

ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்த சமந்தா

தமிழி, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதையடுத்து ‘குஷி’ […]

You cannot copy content of this page

Skip to content