இலங்கை

யாழ் வைத்தியர்கள் மனநோயாளிகள்? மன்னிப்பு கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்-

  • September 14, 2023
  • 0 Comments

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை 14.09.23 இன்று நடத்தி கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது பாராளுமன்றில் தான் ஆற்றிய உரையின் கருத்தினால் வைத்தியர்கள் பாதித்திருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிராக ஜக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் நான் உரையாற்றி இருந்தேன் அதனை ஊடகம் ஒன்று திரிவுபடுத்தி அதன் […]

இலங்கை

நல்லூர் கந்தனின் வருடாந்திர மகோற்சவம் : நாளை முருகப்பெருமான் திருக்கல்யாணம்

  • September 14, 2023
  • 0 Comments

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்தத்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார் , மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் காலை 07 மணிக்கு ஆலய தீர்த்த கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்த உற்சவம் இடம்பெற்றது. தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். […]

இலங்கை

யாழில் மதுபான சாலையை அகற்றுமாறு கோரி மக்கள் போராட்டம்

  • September 14, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மதுபான சாலை அமைந்துள்ள குறித்த பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் இந்த மதுபானசாலை அகற்றப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு சில தினங்களுக்குள் மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். போராட்டம் […]

ஆசியா செய்தி

ஈராகில் 2014 ஆண்டு யாத்திரை குண்டுவெடிப்பு – பயங்கரவாதிக்கு மரண தண்டனை

  • September 14, 2023
  • 0 Comments

17 யாத்ரீகர்களைக் கொன்ற 2014 தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதற்காக இஸ்லாமிய அரசு குழுவின் உறுப்பினருக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது என்று நீதித்துறை தெரிவித்துள்ளது. பாக்தாத்தின் வடக்கே தாஜி மாவட்டத்தில் நடந்த தாக்குதல், ஷியா முஸ்லிம்களின் பண்டிகைகளின் போது யாத்ரீகர்களுக்கு இலவச உணவு மற்றும் பானங்கள் வழங்கும் பல கடைகளில் ஒன்றான “மவ்காப்” கடையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்கின் ஷியைட் பெரும்பான்மையினரால் மதிக்கப்படும் 12 இமாம்களில் ஒருவரான ஹசன் அல்-அஸ்காரியின் மரணத்தின் ஆண்டு […]

விளையாட்டு

இலங்கை அணிக்கு 252 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

  • September 14, 2023
  • 0 Comments

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டி மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது. இன்றைய நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் வெற்றி பெற்றார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. மழைக்காரணமாக 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Mohammad Rizwan ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக […]

இலங்கை

காளை மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

  • September 14, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி உயிரிழந்துள்ளார். இருபாலையைச் சேர்ந்த நித்தியசிங்கம் என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காளை மாட்டுக்கு உணவு வைக்க சென்ற வேளை காளை மாடு முட்டி காயமுற்றவர் வீழ்ந்து கிடந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை

இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

  • September 14, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டிற்கான சுகாதார அமைச்சகத்தின் குடும்ப சுகாதாரப் பணியகத்தால் வெளியிடப்பட்ட ‘ஊட்டச்சத்து மாதம்’ அறிக்கையின்படி, 5 வயதுக்குட்பட்ட 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால்  பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நாடளாவிய ரீதியில் 15,763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இருப்பினும், இது 2022 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த SAM குழந்தைகளின் எண்ணிக்கையை விடக் குறைவு, இது மொத்தம் 18,420 ஆக இருந்தது. இதற்கிடையில், 5 வயதுக்குட்பட்ட […]

இலங்கை

இலங்கையின் 03 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

  • September 14, 2023
  • 0 Comments

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு,  கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேசம் மற்றும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பிரதேசம் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, மற்றும் அஹெலியகொட ஆகிய பகுதிகளுக்கு இந்த மஞ்சள் நிற மண்சரிவு குறித்த ஆரம்ப எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலகம்

சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்!

  • September 14, 2023
  • 0 Comments

மகத்தான தேர்தல் வெற்றியின் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சிங்கப்பூர் ன் ஒன்பதாவது அதிபராக தர்மன் சண்முகரத்தினம் வியாழக்கிழமை இன்று 14 இஸ்தானாவில் புதிய அதிபராக பதவியேற்று கொண்டார், சிங்கப்பூர் அதிபராக பொறுப்பில் இருந்த ஹலீமா யாக்கோப்பின் பதவி காலம் நிறைவு பெரும் முன்பே கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி சிங்கப்பூர் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் தமிழ் வம்சாவளியாளரான தர்மன் சண்முகரத்னம், இங் கொக் சொங், டான் கின் லியான் ஆகியோர் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த […]

இலங்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி உள்ளிட்ட நால்வரை இலங்கை அனுப்ப நடவடிக்கை!

  • September 14, 2023
  • 0 Comments

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த முருகன், நளினி உள்ளிட்ட நான்கு பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் திருச்சி அகதிகள் முகாமில் உள்ள முருகனை விடுவித்து   தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என நளினி வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கமைய முருகன் உள்ளிட்ட நான்கு பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நான்கு பேரின் கடவுச்சீட்டு […]