நாடாளுமன்ற உறுப்பினர் உதித்த பிரேமரத்னவை நோக்கி துப்பாக்கிச் சூடு
நாடாளுமன்ற உறுப்பினர் உதித்த பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. அநுராதபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனமொன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. துப்பாக்கி பிரயோகத்தை நடாத்திய நபர்கள், தப்பி சென்றுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.