ஐரோப்பா செய்தி

நெதர்லாந்து பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் வீட்டில் துப்பாக்கிசூடு – இருவர் மரணம்

  • September 28, 2023
  • 0 Comments

ரோட்டர்டாமில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனை வளாகம் மற்றும் அருகிலுள்ள வீட்டில் துப்பாக்கி ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு ஆசிரியர் மற்றும் உள்ளூர் பெண்ணை கொல்லப்பட்டதாக டச்சு போலீசார் தெரிவித்தனர். 32 வயதான சந்தேக நபர், ஒரு பல்கலைக்கழக மாணவன், தனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் 39 வயதுடைய பெண்ணை சுட்டுக் கொன்றதுடன், அவரது 14 வயது மகளையும் பலத்த காயப்படுத்தியதாக, பொலிசார் தொலைக்காட்சி செய்தி மாநாட்டில் தெரிவித்தனர். பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்த பிறகு, துப்பாக்கிதாரி […]

இலங்கை செய்தி

தேசிய ரீதியில் சாதனை படைத்த கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவிகள்

  • September 28, 2023
  • 0 Comments

17 வயதிற்குட்பட்ட பெண்கள் கபடி அணியினர் இம்முறை நடைபெற்ற தேசிய ரீதியிலான கபடி போட்டியில் முதலாம் இடத்தை பெற்று சாதனையை நிலை நாட்டினர். இரண்டாவது வருடமாகவும் தொடர்ந்து முதல் நிலையை இப்பாடசாலை தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இச் சாதனையை கௌரவிக்குமுகமாக இன்றைய தினம் (28) கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பிரபல்யமான ஸ்ரீ ராம் நகை கடையின் உரிமையாளர் சாதனை புரிந்த அனைத்து வீராங்கனைகளையும் கௌரவித்தார். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் என பலரும் […]

இலங்கை

உயிருக்கு அச்சுறுத்தல்? முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகினார்

  • September 28, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் செப்டம்பர் 23 அன்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக அறிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறினார். இது தொடர்பில் தனது பதவி விலகக் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு […]

விளையாட்டு

அக்சர் பட்டேலுக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்த அஷ்வின்

  • September 28, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கான இந்தியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்த அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது அஸ்வின் சேர்க்கப்பட்டு இருக்கிறார். முன்னதாக உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

விண்வெளியில் 371 நாள்கள் இருந்து சாதனை படைத்த விண்வெளி வீரர்..!

  • September 28, 2023
  • 0 Comments

விண்வெளியில் அதிக நாள்கள் இருந்த அமெரிக்க விண்வெளி வீரர் பூமிக்குத் திரும்பியுள்ளார். ஃபிரெங்க் ருபியோவும் (Frank Rubio) 2 ரஷ்ய வீரர்களும் கடந்த ஆண்டு செப்டம்பரில் விண்வெளிக்குச் சென்றனர். அவர்கள் 6 மாதங்களுக்கு முன் திரும்பவிருந்தனர். விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணம் தடைப்பட்டது. 180 நாள் பணியாக இருந்திருக்க வேண்டிய பணி 371 நாட்கள் தங்கும் பணியாக மாறியது. அவர்கள் புதிய விண்கலம் அனுப்பப்படும் வரை காத்திருக்கவேண்டியிருந்தது. ருபியோ விண்வெளியில் ஆக நீண்ட காலம் இருந்த அமெரிக்க […]

இலங்கை

நீண்ட விடுமுறை: பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

  • September 28, 2023
  • 0 Comments

இன்று ஆரம்பமாகியுள்ள நீண்ட வார இறுதி விடுமுறையின் பல்வேறு பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் போது போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்துமாறு பொலிஸார் மக்களை கோரியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இதனை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நீண்ட […]

இலங்கை

விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • September 28, 2023
  • 0 Comments

திருகோணமலை -திரியாய் காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்காக சென்றவர் கரடி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (28) ,மாலை இடம் பெற்றுள்ளது. கஷ்ட நிலைமை காரணமாக விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற போது விழுந்து கிடந்த மரத்துக்கு கீழால் உறங்கிக் கொண்டிருந்த கரடி பாய்ந்து தாக்கியதால் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இவ்வாறு படுகாயமடைந்தவர் கும்புறுபிட்டி- நாவல்சோலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான […]

இலங்கை

இலங்கையில் சிறுமிகளின் ஆபாச காட்சிகளை விற்பனை செய்த இளைஞர் கைது!

  • September 28, 2023
  • 0 Comments

பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய படச்சட்டங்களை விற்பனை செய்த 24 வயது இளைஞன் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் கைத்தொலைபேசியில் சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய சுமார் 7000 பிரேம்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 3 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் இருப்பது தெரியவந்துள்ளது. சந்தேக நபர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அறிந்திருக்க வேண்டியவை

ஆல்பா்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்து பிரதி ரூ.10 கோடிக்கு ஏலம்

  • September 28, 2023
  • 0 Comments

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பா்ட் ஐன்ஸ்டீன், தான் முன்மொழிந்த சிறப்பு சாா்பியல் கொள்கை, பொது சாா்பியல் கொள்கை ஆகியவை குறித்து கைப்பட எழுதிய பிரதி ஏலத்தில் ரூ.10.7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 23 அன்று வால்டோர்ஃப் அஸ்டோரியா ஷாங்காயில் ஏலம் நடைபெற்றது. அறிவியலில் முக்கிய இடம் வகிக்கும் சிறப்பு சாா்பியல் கொள்கையை 1905-ஆம் ஆண்டிலும், பொது சாா்பியல் கொள்கையை 1915-ஆம் ஆண்டிலும் ஐன்ஸ்டீன் வெளியிட்டாா். பிப்ரவரி 3, 1929 அன்று நியூயார்க் டைம்ஸின் சிறப்பு இணைப்பில் […]

இலங்கை

இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையங்களை பாதுகாக்க அமெரிக்கா உறுதி!

  • September 28, 2023
  • 0 Comments

இலங்கை துறைமுகங்கள் விமானநிலையங்களை பாதுகாப்பது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளதாக  அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவை தான் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கையின் துறைமுகங்கள் விமானநிலையங்களின் அபிவிருத்தி குறித்து ஆராய்ந்ததாகவும், இவை இலங்கையின் வர்த்தக மற்றும் தனியார் துறையினரை முன்னிறுத்திய அபிவிருத்திகளிற்கு அவசியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கையின் விமானப்போக்குவரத்து துறை,  துறைமுகங்கள் போன்றவற்றின் வெளிப்படையான வளர்ச்சியை எளிதாக்குவதற்கும் […]