இலங்கை

விபத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் குடுபத்திற்கு நிதியுதவி வழங்கி வைப்பு

அண்மையில் கொழும்பில் வாகனம் மோதி உயிரிழந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்திற்கு இலங்கை பொலிஸார் இழப்பீடு வழங்கியுள்ளனர். குறித்த உத்தியோகத்தரின் பெற்றோர் நேற்று (06) பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு 103,808 ரூபா மற்றும் 125,000 ரூபா பணமாக வழங்கப்பட்டது. மேலும், உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிருடன் இருந்து சேவையில் இருப்பதாக கருதி அவரது குடும்பத்திற்கு 55 வயது வரையிலான மாதாந்திர சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், அனைத்து சம்பள உயர்வுகள் மற்றும் அரசாங்கத்தின் சம்பள மாற்றங்களை உள்ளடக்கியதாக, சம்பந்தப்பட்ட […]

இலங்கை

சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு!

  • October 7, 2023
  • 0 Comments

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 53 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 6,000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளதாகவும்,  25,000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் 1,173 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக சிக்கிம் மாநில அரசு தெரிவித்துள்ளது. ஒரு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து, டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் சிக்கிம் மாநிலத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு

பாலஸ்தீன் மீது இஸ்ரேல் தாக்குதல் : 100 பேர் பலி!

  • October 7, 2023
  • 0 Comments

பாலஸ்தீனத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் 100க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் பல பகுதிகளுக்குள் நுழைந்த பலஸ்தீன ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளது. பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல்களால் சுமார் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் உறுப்பினர்களால் இஸ்ரேலியர்கள் குழுவொன்று கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களும் தெரிவிக்கின்றன. இதேவேளை, 161 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் […]

இலங்கை

யானை வேலி கண்டுபிடிப்பு: வவுனியா பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ள கெளரவம்- துணைவேந்தர் பெருமிதம்

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு யானை வேலி கண்டுபிடிப்பு பெயரை ஈட்டி தந்துள்ளதில் பெருமை கொள்வதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட யானை வேலியான தொங்குவேலி புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பாடசாலைக்கு அமைத்து கொடுக்கும் நிகழ்வு நேற்று (06.10.2013) நடைபெற்றுள்ளது இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ”யானை மனித முரண்பாடு என்பது இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளிலே இருக்கின்றது. யானையை கொல்லுவதென்பது […]

இலங்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தேர்வை 05 பாடங்களாக குறைக்க திட்டம்!

  • October 7, 2023
  • 0 Comments

கல்விப் பொதுத் தராதர சாதாரணத்  தேர்வை ஐந்து அல்லது ஆறு பாடங்களாகக் குறைப்பது தொடர்பில்கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, 2025ஆம் ஆண்டு முதல் பரீட்சை முறையில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்த மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மேற்கொள்ளும் விரிவான கல்வி சீர்திருத்தத்தின் கீழ் இந்த திட்டத்தை கொண்டுவரவுள்ளதுடன், இதன் மூலம் மாணவர்களுக்கான பரீட்சைகளின் சுமையை குறைப்பதற்கும் அதன் தரத்தை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:15 பேர் பலி: 78 பேர் படுகாயம்

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது மற்றும் 78 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ளூர் நேரப்படி 11:00 மணியளவில் (06:30 GMT) 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்ப நிலநடுக்கத்தைத் […]

இலங்கை

புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

  • October 7, 2023
  • 0 Comments

உப புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், இன்று (07.10) கடமையில் ஈடுபடவுள்ள அனைத்து உப புகையிரத கட்டுப்பாட்டாளர்களும் நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறும் அவர் விசேட அறிவித்தலை விடுத்துள்ளார். இதன்படி நியமிக்கப்பட்ட பணிநிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க சிரமப்படும் அதிகாரிகள் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ரயில்வே பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

திருகோணமலையில் தனிநபருக்கு சொந்தமான காணியில் விகாரை அமைக்க முடியுமா..! பிரகாஷ் குகதாஸ் கேள்வி

திருகோணமலை- பொரலுகந்த தனிநபருக்கு சொந்தமான காணியில் விகாரை அமைக்க முடியுமா என சமூக அபிவிருத்தி கட்சியின் பொதுச் செயலாளர் குகதாஸ் பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த விகாரை தொடர்பில் இன்று (07) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில் ” 01.அரச காணியினை குத்தகைக்கு வழங்குவது சம்பந்தமாக குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட வில்லை. 02. பிரதேச செயலாளர் – பிரதேசசபை – U.D.A – Forost Department – சுற்றாடல் அதிகாரசபை – […]

இலங்கை

திடீர் வானிலை மாற்றத்தால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: மஹிந்த அமரவீர

நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் உணவு தட்டுப்பாடு அபாயத்தை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக சுமார் 70,000 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன், தற்போது பல மாகாணங்களில் பெய்து வரும் அடை மழையினால் அறுவடைக்கு வரவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் […]

இலங்கை

இலங்கையில் உள்விவகாரங்கள் தொடர்பில் சர்வதேசம் விசாரணை நடத்த முடியாது!

  • October 7, 2023
  • 0 Comments

இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதற்கு உடன்பட முடியாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த நாட்டில் இவ்வாறான விசாரணைகளை மேற்கொள்வது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஞானார்த்த பிரதிபய நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் “சுதந்திரமான, வெளிப்படையான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச விசாரணைக் குழு தேவை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கை மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.