ஐரோப்பா

ஜெர்மனியில் விசேட நிதி திட்டம் – குழந்தைகளுக்காக அறிமுகம்

  • July 2, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் குழந்தைகளுக்கான விஷேட நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. ஜெர்மனி நாட்டினுடைய சமூக நல அமைச்சர் ஈஸா பௌஸ் அவர்கள் குழந்தைகளுடைய ஏழ்மை நிலையை நீக்குவதற்காக ஓர் நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் ஏற்கனவே தெரிவித்து இருக்கின்றார். இவ்வாறு கிண்ட குர்ஷிகர் என்று சொல்லப்படுகின்ற இந்த புதிய நிதி திட்டம் அமுலுக்கு வருமானால் குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருந்து விடுவிக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார். இந்நிலையில் இந்த கிண்டர் குர்ஷிகர் என்று சொல்லப்படுகின்ற குழந்தைகளுக்காக வழங்கப்படுகின்ற நிதியத்துக்கு […]

இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தல் – அதிரடியாக களமிறங்கிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்

  • July 2, 2023
  • 0 Comments

மேல் மற்றும் தென் மாகாணங்களில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த நிலையில் இதனை ஒடுக்குவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல் மாகாணத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களிலும் தென் மாகாணத்தின் கொஸ்கொட, அம்பலாங்கொட, அஹூங்கல்ல, எல்பிட்டிய, மீட்டியகொட, ஹிக்கடுவ மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீதி சோதனைச் சாவடிகளை அமைத்து சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

டுவிட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்

  • July 2, 2023
  • 0 Comments

பயனர்களுக்கு தற்காலிக வரம்புகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக டுவிட்டர் அறிவித்துள்ளது. டேட்டா ஸ்கிராப்பிங், தகவல் ஆளுகைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் (Verified Accounts) ஒரு நாளைக்கு 10,000 பதிவுகளையும், பிற பயனர்கள் 1000 பதிவுகளையும், புதிய பயனர்கள் 500 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற தரவுகளை ஒழிப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். முதலில், சரிபார்க்கப்பட்ட கணக்கு உள்ள பயனர்கள் ஒரு நாளைக்கு 6,000 […]

ஆஸ்திரேலியா

உலகில் முதல் நாடாக ஆஸ்திரேலியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

  • July 2, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில மனநிலை சம்மந்தப்பட்ட சிகிச்சைக்கு மேஜிக் காளான்களை, சட்டபூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் நாடாக ஆஸ்திரேலியா, மனநிலை சம்மந்தப்பட்ட சில பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க மேஜிக் காளான்களை சட்டபூர்வமாக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் போதைப்பொருள் கண்காணிப்பு அமைப்பான தெரப்யூடிக் குட்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (TGA) கிட்டத்தட்ட மூன்று வருட ஆலோசனைக்குப் பிறகு இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் நேற்று முதல், ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்கள் PTSD எனும் மனநிலை சிகிச்சைக்கு எக்ஸ்டசி என […]

முக்கிய செய்திகள்

மீண்டும் தாயகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முத்துராஜா யானை!

  • July 2, 2023
  • 0 Comments

சக் சுரின் என அழைக்கப்படும் முத்துராஜா யானையை கொண்டு செல்லும் விமானம், சற்று முன்னர் தாய்லாந்தின் பெங்காக் நகரை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. தாய்லாந்து அரசாங்கத்தினால், இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்பட்ட யானையே இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளது. குறித்த யானையை அழைத்துச் செல்வதற்காக, ரஷ்யாவுக்கு சொந்தமான இழுசியன் ரக சரக்கு போக்குவரத்து விமானம் இலங்கைக்கு வந்திருந்தது. விசேடமாக தயாரிக்கப்பட்ட கூண்டில் ஏற்றப்பட்ட சக் சுரின் யானை இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு […]

வாழ்வியல்

பாத வெடிப்பா?… வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரிசெய்யலாம்..!

  • July 2, 2023
  • 0 Comments

சிலருக்கு பாதங்களில் வெடிப்பு ஏற்படும். அதனை பித்தவெடிப்பு என கூறுவோம். சில வேளைகளில் இந்த பாதவெடிப்பு வலியை தரும். தற்போது குளிர்காலத்தில் அதிக அளவு பாத வெடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அதனை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்போம். ஆப்பிள் சாறு வினிகர் : முதலில் வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் ஆப்பிள் சாறு வினிகரை சேர்த்து நன்றாக கலந்து கால்களை அந்த நீரில் வைக்க வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்து வர […]

ஐரோப்பா

பிரான்ஸில் தொடரும் பதற்ற நிலை – முக்கிய விஜயத்தை இரத்து செய்த ஜனாதிபதி

  • July 2, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஜேர்மனிக்கான தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை இரத்து செய்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவது இதுவே முதன்முறையாகும். அதற்கமைய, பிரான்ஸ் ஜனாதிபதி இன்றைய தினம் ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார். எனினும் பிரான்ஸில் இடம்பெறும் போராட்டங்களை அடுத்து பிரான்ஸ் ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை பிற்போடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி ஜேர்மன் ஜனாதிபதியுடன் தொலைபேசியூடாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பா

மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கலாம் – புதிய ஒப்பந்ததால் ஏற்பட்ட மாற்றம்

  • July 2, 2023
  • 0 Comments

மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கவும் வேலை செய்யவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை விடுமுறை விசாக்களுக்கான வயது வரம்பு 35 ஆக ஆஸ்திரேலியா உயர்த்தியமையினால் இந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அனைத்து பிரித்தானிய குடிமக்களுக்கும் வயது வரம்பு 30 இல் இருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 16 மில்லியன் பெரியவர்கள் இப்போது தகுதி பெற்றுள்ளனர். சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான இந்த மாற்றங்கள், கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாகும். […]

இலங்கை

இலங்கையில் பச்சைக்குத்திக் கொள்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • July 2, 2023
  • 0 Comments

இலங்கையில் பச்சைக்குத்திய நபர்களிடம் இருந்து ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. பச்சைக் குத்துதல் மற்றும், ஊசி ஏற்றல் முதலான செயற்பாடுகள் மூலம், எயிட்ஸ் உள்ளிட்ட 5 நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக தெரியவந்துள்ளது. இதனாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். எனவே, பச்சைக் குத்திய காலத்தில் இருந்து, ஒரு வருட […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் நாய்களை கவனிக்க 100000 பவுண்ட் சம்பளம் – நூற்று கணக்கானோர் விண்ணப்பம்

  • July 2, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் ஒரு லட்சம் பவுண்ட் சம்பளத்தில் வேலைவாய்ப்பிற்கு 400 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவில் உள்ள ஒரு பணக்கார குடும்பம் தங்களது வளர்ப்பு பிராணிகளை கவனித்துக்கொள்ள இந்த சம்பளத்துடன் வேலை வாய்ப்பை அறித்துள்ளது. குறித்த பணக்கார குடும்பம், தங்களது செல்லப்பிராணிகளை கவனித்துக்கொள்ளும் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, அவர்களது இரு வளர்ப்பு நாய்களை பராமரிக்க ஒரு லட்சம் பவுண்ட் சம்பளத்துடன் வேலை வழங்கவுள்ளதாக அறிவித்தள்ளனர். விண்ணப்பதாரர்கள் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுப் பொருட்களை கவனித்தால், கால்நடை மருத்துவருடன் […]

You cannot copy content of this page

Skip to content