சுடப்பட்ட சீதா என்ற யானையின் உடலில் இருந்து இரும்பு உருண்டைகள் மற்றும் ஈயத் துண்டுகள் மீட்பு
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சீதா என்ற யானைக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சத்திரசிகிச்சையின் போது உடலில் இரும்பு உருண்டை மற்றும் பல ஈயத் துண்டுகள் காணப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார். ரணவன பிரதேசத்தில் இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானையின் மார்புப் பகுதிக்கு அருகில் ஒரு இரும்பு உருண்டை மற்றும் சில ஈயத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யானையின் மார்புப் துவாரத்தில் […]