இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு இதுவே காரணம்!! முரளி விளக்கம்
அணியில் விளையாடும் அனைவரும் அணியின் தலைவராக ஆசைப்பட்டதால்தான் 2015-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை கிரிக்கெட் இந்த அளவுக்கு அழிந்தது என இலங்கையின் முன்னாள் உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றிரவு (17) இடம்பெற்ற பாடசாலை கிரிக்கட் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “தலைவராக உங்களை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று யாராவது நினைத்தால் அது தவறான கருத்து. நீங்கள் விளையாடும் […]