இலங்கை

மக்கள் வெளிப்படையாகச் சிந்திப்பது சிலருக்குப் பிடிக்காது – அகிலவிராஜ்

  • July 10, 2023
  • 0 Comments

பாலியல் கல்வி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டபோது,  அதற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தன. ஆனால் தற்போது இந்த விடயங்கள் உள்வாங்கப்படாததால் தான் சமூகம் சீரழிந்து வருகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அண்மையில் பிக்கு ஒருவருடன் இருந்த  இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் காணொலியாக எடுக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது பாலியல் கல்வி குறித்தும் அது […]

இலங்கை

இலங்கையை உலுக்கிய கோர விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • July 10, 2023
  • 0 Comments

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் ஒருவர் அதிகாலை உயிரிழந்த நிலையில் இந்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும்,3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உயிரிழந்தவர்களில் 10 பேரின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையிலும், ஒருவரது சடலம் மனம்பிடிய வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, விபத்தில் காயமடைந்த நிலையில் 40க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் […]

இலங்கை

ஜனாதிபதியுடன் கொள்கைப் பிரச்சினை இருக்கிறது – பகிரங்கமாக ஒப்புக்கொண்ட நாமல்!

  • July 10, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கொள்கைப் பிரச்சினை இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக தாம் நம்புவதாக தெரிவித்த அவர், மகிந்த ராஜபக்சவின் அரசியல் கொள்கையும், ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கொள்கையும் இதுவரையில் மாறவில்லை எனவும் கூறினார். தற்போதைய அரசாங்கத்தின் […]

ஆசியா

சிங்கப்பூரில் புதிய சட்டத்தினை அமுல்படுத்த அனுமதி!

  • July 10, 2023
  • 0 Comments

சிங்கப்பூரல் புதிய சட்டத்தினை அமுல்படுத்த நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப வன்முறைக்கு ஆளாவோரை மேலும் சிறந்த முறையில் பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. வெவ்வேறு விதத் துன்புறுத்தல்களை உள்ளடக்கும் வகையில் குடும்ப வன்முறையின் அர்த்தத்தைத் திருத்துவதும் அதில் அடங்கும். தனிநபர் பாதுகாப்பு ஆணைக்கு விண்ணப்பம் செய்வதற்கான வயது வரம்பு 18க்குக் குறைக்கப்படுகிறது. குடும்ப வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயரும் வேளையில் புதிய சட்டங்கள் வருகின்றன. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு சென்ற ஆண்டு சுமார் 2,300 […]

உலகம்

பைடன் திறமையற்ற நிர்வாகி – ட்ரம்ப் விமர்சனம்!

  • July 10, 2023
  • 0 Comments

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு திறமையற்ற நிர்வாகி என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கிடையே தற்போது காங்கிரஸ் மற்றும் குடியரசு கட்சிகளுக்கு இடையிலான போட்டி அதிகரித்துள்ளது. ஒருவர் மீது மற்றொருவர் பல முறைப்பாடுகளை முன்வைத்த விமர்சித்து வருகின்றனர். அவ்வாறாக லாஸ் வேகாஸில் பிரச்சாரம் செய்த அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,  குடியேற்றம் மற்றும் பொருளாதாரம் முதல் ஊழல், […]

ஐரோப்பா

பிரான்ஸில் 14 வயதுடைய சிறுவனை கடத்தி அதிர்ச்சி கொடுத்த கும்பல்

  • July 10, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவனை கடத்தி வைத்து, அவனது பெற்றோரிடம் பணம் கோரிய மூவர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 26 ஆம் திகதி இடம்பெற்ற போதும், இது தொடர்பான தகவல்களை தற்போதே பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நள்ளிரவு Blanc-Mesnil நகரில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மூவர் கொண்ட குழு ஒன்று, அங்கு வசித்த சிறுவன் ஒருவரையும், அவனது தாயையும் மிரட்டி பணம் கோரியுள்ளனர். பின்னர் சிறுவனை அங்கிருந்து […]

ஐரோப்பா

கிளஸ்டர் குண்டுகளால் உக்ரைனுக்கே ஆபத்து- கம்போடியா!

  • July 10, 2023
  • 0 Comments

கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என கம்போடியாவின் பிரதம மந்திரி உக்ரைனிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 1970 களின் முற்பகுதியில் அமெரிக்காவால் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஆயுதங்களின் எச்சங்களை இன்னும் கையால்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். “உக்ரைன் பிரதேசத்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டால், அது பல ஆண்டுகளாக அல்லது நூறு ஆண்டுகள் வரை உக்ரைனியர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கம்போடியாவில் இவ்வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டு அரை நூற்றாண்டுகளை கடந்துவிட்டது. […]

இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறும் மக்கள் – அதிகரிக்கும் எண்ணிக்கை

  • July 10, 2023
  • 0 Comments

இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கையே இதுவாகும். கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. முக்கியமாக கட்டார், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேலும் சுமார் 300,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று எதிர்பாக்கப்படுவதாக […]

ஆசியா செய்தி

காட்டு பன்றிகளுக்கான பாதுகாப்பை தள்ளுபடி செய்த சீனா

  • July 9, 2023
  • 0 Comments

காட்டு பன்றிகளுக்கான பாதுகாப்பை சீனா தள்ளுபடி செய்தது. பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேட்டையாட அனுமதிக்கப்படும் எனவும் சீன அரசு அறிவித்துள்ளது. காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து விவசாயிகளை பாதிக்கத் தொடங்கியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் 31 மாகாணங்களில் 28 மாகாணங்களில் காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன. பல இடங்களில் காட்டுப்பன்றிகள் பலரை தாக்கியுள்ளன. ஆனால் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகள் விலக்கப்பட்டதால், இது கட்டுப்பாடற்ற வேட்டையாடலுக்கும் காட்டுப்பன்றிகளின் […]

செய்தி

கோட்டாபய ராஜபக்சவை ஆட்சியில் இருந்து அகற்ற வெளிநாட்டில் இருந்து வந்த பணம்

  • July 9, 2023
  • 0 Comments

கடந்த வருடம் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக பெறப்பட்ட வெளிநாட்டு பணம் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தெரிவித்துள்ளார். பிரதிவாதிகளில் ஒருவர் குவாத்தமாலாவில் இருந்து பணம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குவாத்தமாலா போதைப்பொருள் கடத்தலுக்கு பெயர் பெற்ற நாடு எனவும், போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தினார். […]

You cannot copy content of this page

Skip to content