செய்தி

மதிய உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கமுடையவரா நீங்கள்..? உங்களுக்கான பதிவு

  • October 26, 2023
  • 0 Comments

நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான வேளைகளில் ஈடுபடுகிறோம். நான் நமது கடமைகளில் எவ்வாறு சரியாக இருக்க வேண்டும் என கருதுகிறோமோ அப்படி தான், நமது உணவு முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். நமக்கு பசிக்கும் போது உணவு உட்கொண்டால் போதும் என நினைக்க கூடாது. காலை, மதியம், இரவு என 3 வேலையும் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும். நாம் உணவு உட்கொள்ளுதலில் கவனம் செலுத்தாமல், தாமதமாக உணவு உட்கொள்ளுவது நமது உடலில் பலவகையான […]

இலங்கை

அமெரிக்க வானை ஒளிரச் செய்த 1000 ட்ரோன்கள் – கண்டு ரசித்த பார்வையாளர்கள்

  • October 26, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள சென்ட்ரல் பூங்கா ஏரிக்கு அருகே இரவு வானை ஒளிரச்செய்யும் வகையில் கண்கவர் ட்ரோன் நிகழ்ச்சி நடைபெற்றது. ட்ரிஃப்ட் எனும் டச்சு நிறுவனத்தால் “பிரான்சைஸ் ஃப்ரீடம்” எனும் பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 1000 ட்ரோன்கள் ஒரே நேரத்தில் வானில் பறக்க விடப்பட்டன. ட்ரோன்கள் மூலம் வானில் தோன்றிய உருவங்களை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். இரவு நேர பறவைகள் மற்றும் அவற்றின் வழித்தடங்களுக்கு இந்த நிகழ்ச்சியினால் எந்த தடையும் ஏற்படாது என உறுதி செய்யப்பட்டதாகவும் […]

பொழுதுபோக்கு

6 நாட்களில் 500 கோடியை தாண்டிய லியோ வசூல்….

  • October 26, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடிப்பில் வெளியான, ‘லியோ’ திரைப்படம் 6 நாட்களில் 500 கோடி வசூலை கடந்து விட்டதாக வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் சுமார் 300 கோடி பட்ஜட்டில் உருவான லியோ அக்டோபர் 19-ஆம் தேதி, வெளியானது. விஜய் ரசிகர்களின், ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், வெளியானது முதலே கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், வெளியான முதல் நாளே ரூ.148 கோடி வசூலித்து ரசிகர்களை பிரமிக்க வைத்தது. at the top of […]

வட அமெரிக்கா

கனடியர்களுக்கு மீண்டும் விசா – இந்தியா அறிவிப்பு

  • October 26, 2023
  • 0 Comments

இந்தியா கனடியர்களுக்கு மீண்டும் விசா வழங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று இதனை தெரிவித்துள்ளது. அந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. கனடியச் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சென்ற ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னணியில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கக்கூடும் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சென்ற மாதம் கூறியிருந்தார். இந்தியா அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. சீக்கியத் தலைவர் கொல்லப்பட்டது […]

உலகம்

இஸ்ரேல் புகைப்படத்தால் விலகிய மர்மம் – பீதியில் காசா மக்கள்

  • October 26, 2023
  • 0 Comments

பதற்றமான போர் சூழலில் காச பகுதிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க இஸ்ரேல் முன்வந்து சாலை மார்க்கமாக நிவாரண பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதித்தது. ஆனால் நிவாரண பொருட்கள் எடுத்துச் சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதற்கிடையே ஐநா மீட்பு அமைப்பினர் காஜாவில் எரிபொருள் தீர்ந்து வருவதாகவும், மருத்துவமனைகளில் இரவு வரை மட்டுமே எரிபொருட்கள் இருக்கும் எனவும், இதனால் காசாவில் உள்ள மருத்துவமனைகள் செயல்படாமல் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் எக்ஸ் சமூக வலைதள […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பதற்றம் – 22 பேர் சுட்டுக்கொலை – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

  • October 26, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் லெவிஸ்டனில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 22 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் அந்த பகுதியில் காணப்படுகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பல இடங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள பொலிஸார் சந்தேகநபரின் படத்தையும் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்த சம்பவம் குறித்து உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் 50 பேர் வரை காயமடைந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லெவிஸ்டனில் நபர் ஒருவர் தொடர்ந்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPTயின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

  • October 26, 2023
  • 0 Comments

கடந்த ஓராண்டாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த விஷயங்களில் ChatGPT-யும் ஒன்று. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் லட்சக்கணக்கான நபர்கள் வேலை இழக்கக்கூடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் Bard என்ற செயற்கை நுண்ணறிவு கருவி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் பல நிறுவனங்கள் இமேஜ், வீடியோ, ஆடியோ, டிசைன் என பல AI டூல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ChatGPT-க்கு தொடக்கத்தில் இருந்த வரவேற்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. தொடக்கத்தில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய வானில் தோன்றிய அதிசயம் – பார்வையிட குவிந்த மக்கள்

  • October 26, 2023
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவில் பெர்த்தின் வடமேற்கே சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள கூமல்லிங்கிற்கு மேலே வானில் அதிசய காட்சி ஒன்று தோன்றியுள்ளது. இந்த அற்புதமான இயற்கை வண்ணமயமான வானவில் மேகம் தோன்றியதாகவும் இது நம்பமுடியாத காட்சியாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது. வானவில் மேகங்கள்,இன்னும் விஞ்ஞான ரீதியாக iridescent மேகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிறிய நீர் துளிகள் அல்லது சிறிய பனி படிகங்கள் டிஃப்ராஃப்ரக்ஷன் எனப்படும் செயல்முறை மூலம் சூரியனின் ஒளியை சிதறடிக்கும்போது நிகழ்கின்றன. மேகங்கள் மிகவும் அரிதானவை அல்ல […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் மரணம் – உடலை சொந்த நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை

  • October 26, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. துவாஸில் உள்ள ஒரு வேலையிடத்தில் சோலார் பேனல்களை நிறுவிக் கொண்டிருந்த கட்டுமான ஊழியர் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்து ஏற்பட்ட படுகாயங்களால் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது. 36 வயதான பங்களாதேஷ் நாட்டவரான அவர், சூரிய வெளிச்சம் உள்ளே வர ஸ்கைலைட் சன்னலை பொருத்திக்கொண்டிருக்கும் போது 10 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தார் என மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது. இது குறித்து […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்!

  • October 26, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் 19 ஆம் வட்டாரத்தில் வசித்த அகதிகள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் காலை பொலிஸாரால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். சுகாதாரமற்ற முறையில் வசித்த 200 வரையான அகதிகளே வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக சிறிய கூடாரங்கள் அமைத்து அகதிகள் பலர் தங்கியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் அங்கு வருகை தந்த பொலிஸார் அகதிகளை வெளியேற்றினர். அவர்கள் இல் து பிரான்சில் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வருடத்தில் இல் து […]