அமெரிக்காவில் நபர் மரணம் – கொலையாளியை காட்டிக்கொடுத்த iPhone
அமெரிக்காவில் நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்பட்ட இளையர் ஒருவர், அப்போது iPhone திறன்பேசியைக் கீழே தவறவிட்டிருந்தார். இவ்வாண்டு மார்ச் மாதம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது. அந்த இளைஞர்தான் iPhoneனின் உரிமையாளர் என்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். திறன்பேசியையும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காணொளியையும் ஆதாரமாக வைத்து, 18 வயது சான்செஸ் ஸ்பென்ஸ் கைது செய்யப்பட்டார். 47 வயது ராபர்ட் ஜொய்னரை ஸ்பென்ஸ் சுட்டுக்கொன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜொய்னர் தலையில் சுடப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட […]