காஸா பகுதியில் இஸ்ரேலின் கொடூர தாக்குதல் – 195 பேர் பலி
காஸா பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றங்களுக்கு வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்தத் தாக்குதல்களால் முகாமில் இருந்த 195 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 120 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவர்கள் மனிதாபிமான இடைநிறுத்தத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளார். அதன்படி, அக்டோபர் 7 முதல், காஸா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களால் குறைந்தது 8,805 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். […]