மனைவியை கொன்று மலசலகூடத்தில் புதைத்த கணவர் : 02 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த உண்மை!
யக்கஹவுல்பொத்த, ரிதிமாலியயெத்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு சடலத்தை மலசலகூட குழியில் மறைத்து வைத்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் ஆகிய இருவருமே நேற்று (29) ரிதிமாலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சோமாவதி என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. […]