மொஸ்கோ வான்பரப்பில் இனந்தெரியாத பொருட்கள் தென்படுவதாக அறிவிப்பு!
மொஸ்கோ விமான நிலையம் விமானங்களை கட்டுப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மாஸ்கோவின் Vnuko விமான நிலையத்தின் வான்வெளியில், இனந்தெரியாதா பொருட்கள் இனங்காணப்பட்டதால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகவும் அறிவித்துள்ளது. மாஸ்கோ பிராந்தியத்தின் பொடோல்ஸ்க் மாவட்டத்தில் – தலைநகருக்கு தெற்கே குறித்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.