கோட்டாபயவுக்கு எதிராக வழக்கு தாக்கல்!!!! றிஷாட் பதியுதீன் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பல அரச அதிகாரிகளுக்கு எதிராக தம்மை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்று (டிசம்பர் 01) பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பதியுதீன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் இணைந்து தம்மை பொறி வைத்து 5 வருடங்கள் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் […]