மிகவும் கண்கவர் விண்கல் மழையை காண இலங்கையர்களுக்கு வாய்ப்பு
டிசம்பர் 14 ஆம் திகதி ஜெமினிட்ஸ் விண்கல் மழையின் உச்சத்தை இலங்கையர்கள் பார்வையிட முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அன்றிரவு 9.00 மணிக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு வானில் அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் சிரேஷ்ட வானியலாளர் இந்திக்க மெதகங்கொட தெரிவித்தார். ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு இந்த ஆண்டின் மிகவும் அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சிறுகோளின் குப்பைகள் வழியாக பூமி செல்லும் […]