இலங்கை

குருந்தூர் மலை விவகாரம் : பிரிவினைவாத மோதல் ஏற்படும் என எச்சரிக்கை!

  • August 23, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு குறுந்தூர்  பௌத்த விகாரையை தமிழ் இந்து கோவிலாக மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்  ஜெயந்த சமரவீர குறிப்பிடுகின்றார். இந்த பிரச்சனையால் மதவாத, இனவாத, பிரிவினைவாத மோதல் உருவாகலாம் என இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். தொல்பொருள் திணைக்களம் தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றாமையே இதற்குக் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார். தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் இலங்கையின் தொல்பொருள் பாரம்பரியத்தின் பாதுகாவலராக இருக்கும் போதே இந்த வரலாற்றுச் […]

இலங்கை

கொழும்பில் பஸ்,கார், லொறி ஆகிய வாகனங்கள் மோதி விபத்து!

  • August 23, 2023
  • 0 Comments

கொழும்பு பிரதான வீதியில் மாவனெல்ல பெலிகம்மன பிரதேசத்தில் வாகனத் தொடரணி ஒன்றுடன் ஒன்று மோதியதில் இன்று (23.08) பிற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு பிரதான வீதியில் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ், கார், லொறி மற்றும் முச்சக்கரவண்டி ஆகிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது முன்னால் பயணித்த மற்றுமொரு முச்சக்கரவண்டி வீதியில் நிறுத்தப்பட்டதையடுத்து பின்னால் வந்த வாகனங்கள் திடீரென பிரேக் போட்டு வாகனங்களை நிறுத்தியுள்ளன. இதனால் பின்னால் வந்த பேரூந்து கார் மீது […]

பொழுதுபோக்கு

‘லியோ’ தயாரிப்பாளர் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் புதிய படமான ‘லியோ’ படத்தின் பின்னணியில் மௌன சக்தியாக இருப்பவர் லலித் குமார். அனிருத் இசையமைத்துள்ள பெரிய பட்ஜெட் கேங்ஸ்டர் திரைப்படம் அக்டோபர் 19 ஆம் திகதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. ‘லியோ’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான அன்றே படத்தின் டிஜிட்டல் மற்றும் இதர உரிமைகளை வாங்க கடும் போட்டி நிலவியதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இறுதியில் இப்படம் ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் மட்டும் இருமடங்கு பட்ஜெட் […]

இலங்கை

எக்ஸ்பிரஸ் கப்பல் குறித்த விசாரணைக்கு திகதியிடப்பட்டது!

  • August 23, 2023
  • 0 Comments

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறு கோரிய வழக்கை ஒக்டோபர் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்க்பபட்டுள்ளது. இது குறித்த உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.  சுற்றாடல் ஆர்வலர் கலாநிதி அஜந்த பெரேரா மற்றும் பலர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்தால், நாட்டின் கடற்கரை மற்றும் அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்புக்கு கடுமையான சேதம் […]

ஆசியா

பிரிக்ஸ் மாநாட்டில் அதிபருக்கு பதில் பங்கேற்ற சீன வர்த்தக அமைச்சர்

  • August 23, 2023
  • 0 Comments

தென்னாபிரிப்பாவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்களின் முக்கிய கூட்டத்தை சீன அதிபர் ஜி ஷின்பிங் புறக்கணித்தார். பிரிக்ஸ் மாநாட்டுக்காக தென்னாபிரிக்கா வந்த சீன அதிபர், அந்நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசாவை நேரில் சந்தித்து பேசிய நிலையில், அதன் பின்னர் நடைபெற்ற முக்கிய கூட்டத்தை புறக்கணித்துளார். கூட்டத்தில் பிரதமர் மோடி தென்னாபிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசா, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்டோர் உரையாற்றிய வரிசையில் சீன அதிபருக்கு பதில் அவர் சார்பில் சீன […]

இலங்கை

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்!

  • August 23, 2023
  • 0 Comments

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் இருவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (23.08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளனர். இத்தாலி குடியரசு மற்றும் ஃபெடரல் ரிபப்ளிக் ஆஃப் ஜெர்மனிக்கு இரண்டு புதிய தூதர்களும், கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்திற்கான புதிய உயர் ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இராஜதந்திரிகளை, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான  சாகல ரத்நாயக்க […]

தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு

  • August 23, 2023
  • 0 Comments

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீனவர் நலனில் அக்கறைக் கொண்டுள்ள இவ்வரசானது, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த […]

ஆசியா

காத்மண்டுவில் ஆற்றில் கவிழ்ந்த பஸ் – 8 பயணிகள் உயிரிழப்பு!

  • August 23, 2023
  • 0 Comments

நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தில் உள்ள பகுதியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தடிங் மாவட்டத்தில் கஜுரி பகுதியருகே சென்றபோது பஸ் அருகேயுள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க உள்ள சந்திரயான்-3!

இந்தியா சந்திரயான் -3 ஐ சந்திரனின் அறியப்படாத தென் துருவத்தில் இன்று தரையிறக்க உள்ளது, மேலும் அனைத்து கண்களும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் விண்கலத்தின் பயணத்தை சாத்தியமாக்கிய அதன் விஞ்ஞானிகள் மீது உள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்குகிறது. இன்று மாலை 5.44 மணிக்கு விக்ரம் லேண்டரை தரையிறக்க ஆயத்தமாவோம் என்று […]

இலங்கை

ஐ.நா கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு!

  • August 23, 2023
  • 0 Comments

ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் கூட்டத்தொடரின்போது ஏற்கனவே இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51 கீழ் 1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எழுத்துமூலம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You cannot copy content of this page

Skip to content