இலங்கை

பெண்களின் உள்ளாடைகளை அணிந்திருந்த இராணுவ சிப்பாய் கைது!

  • August 26, 2023
  • 0 Comments

ஹொரண பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் பெண்களுக்கான உள்ளாடைகளை அணிந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர். நிகவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த நாற்பது வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் இராணுவ முகாமிற்கு அண்மித்த வீடொன்றில், குறித்த பெண்ணின் உள்ளாடைகள் தொடர்ச்சியாக காணாமல் போயிருந்தமை தொடர்பில் அவதானம் செலுத்திய வேளையில், குறித்த இராணுவ சிப்பாய் உள்ளாடைகளை திருடியது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபரை துரத்த முயன்றதாகவும், அவர் கம்பி வழியாக பதுங்கி […]

பொழுதுபோக்கு

69வது தேசிய விருதுகளை வென்றவர்களுக்கு உலகநாயகனின் வாழ்த்துக்கள்…

  • August 26, 2023
  • 0 Comments

இந்திய அரசால் 69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது, உலகநாயகன் கமல்ஹாசன் ‘புஷ்பா : தி ரூல்’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து கமல் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். அவர் தமிழில் எழுதியது: “69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘கடைசி விவசாய’ படத்திற்காக சிறந்த தமிழ் படத்திற்கான விருதையும், […]

இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை கடந்தது!

  • August 26, 2023
  • 0 Comments

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,000ஐ தாண்டியுள்ளது. எவ்வாறாயினும், டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை 34 ஆகக் குறைந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இன்று (26.08) வரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,225 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆசியா

ஒரு இரவு கூட தாக்குப் பிடிக்காது ; இந்தியாவின் திட்டத்தை கேலி செய்த சீனா

  • August 26, 2023
  • 0 Comments

நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறும் அரிய காட்சிகள் அடங்கிய வீடியோவை இஸ்ரோ நேற்று வெளியிட்டது. உலகின் எந்த நாடுமே நுழைந்திடாத நிலவின் தென்துருவத்தில் இந்தியா தடம் பதித்து உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் திகதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது.அதைத்தொடர்ந்து சில மணி நேரத்தில் லேண்டரில் இருந்த 26 கிலோ பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் […]

ஐரோப்பா

மரணம் குறித்து பிரிகோஜினை முன்னதாகவே எச்சரித்த புட்டினின் நெருங்கிய நண்பர்!

  • August 26, 2023
  • 0 Comments

ரஷ்ய கூலிப்படையின் தலைவர் யெவ்கெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ள நிலையில் அவருடைய மரணம் தொடர்பில் சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. அந்தவகையில்  அவருடைய மரணம் குறித்து தற்போது பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறுகையில்  யெவ்கெனி பிரிகோஜின்  ஆபத்தில் இருப்பதாக தான் பல சந்தர்ப்பங்களில் எச்சரித்ததாக தெரிவித்துள்ளார். வாக்னர் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட கிளர்ச்சியின் போது தான் இந்த எச்சரிக்கையை விடுத்த போதிலும்  பிரிகோஷின் தான் இறக்கத் தயார் எனக் கூறி அதனை மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் இருந்து நீ […]

செய்தி

இலங்கையை விட்டு வெளியேறவுள்ள வைத்தியர்கள்!

  • August 26, 2023
  • 0 Comments

மருத்துவப் பட்டப்படிப்பை முடித்த மற்றுமொரு மருத்துவர்கள் குழு எதிர்வரும் மாதங்களில் விசேட பயிற்சிக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மருத்துவ பட்டப்படிப்பை முடித்த சுமார் 785 வைத்தியர்கள் எதிர்வரும் மாதங்களில் விசேட பயிற்சிக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக தற்போது வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற வைத்தியர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் […]

மத்திய கிழக்கு

பிரான்ஸ் தூதர் உடனே வெளியேற வேண்டும்.. நைஜர் ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • August 26, 2023
  • 0 Comments

நைஜரில் கடந்த மாதம் ராணுவ கிளர்ச்சி ஏற்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பாதுகாப்பின்மையையும், பொருளாதார நலிவையும் காரணம் காட்டி, அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பஸோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி புதிய அதிபராக பதவியேற்றார். ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, மீண்டும் பஸோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பிரயோகிப்போம் எனவும் எச்சரித்திருந்தது. இதற்கு […]

ஆசியா

தென் சீனக் கடலில் இராணுவ பயிற்சியில் ஈடுபடும் முக்கிய நாடுகள்!

  • August 26, 2023
  • 0 Comments

தென் சீனக் கடலில் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அவுஸ்திரேலியாவும் பிலிப்பைன்ஸும் இணைந்து நடத்தும் முதலாவது இராணுவப் பயிற்சி இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இராணுவப் பயிற்சியை அவதானிப்பதற்காக அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரும் வருகை தந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இராணுவப் பயிற்சியில் அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளதுடன், 2000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இராணுவப் பயிற்சியில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]

இலங்கை

திருகோணமலையில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய வேன் – பரிதாபமாக பலியான சிறுமி !

  • August 26, 2023
  • 0 Comments

திருகோணமலை-உட்துறைமுக வீதியில் வேனொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.இவ்விபத்து நேற்றிரவு (25) இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி பயின்று வரும் திருமலை டொக்யாட் வீதி இணக்கம் 156/6 இல் வசித்து வரும் எட்ரிக் செர்லின் (09) என்ற சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. மோட்டார் சைக்கிளில் தாய், மகள் மற்றும் அவரது தம்பியின் மகள் ஆகியோர் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் எதிரே வந்த சொகுசு […]

இலங்கை

மாவனல்ல – கொழும்பு நகர வீதியில் விபத்து!

  • August 26, 2023
  • 0 Comments

மாவனல்ல – கொழும்பு நகர வீதியில் மொலகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மாவனல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இன்று (26.08) இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. கேகாலை, மொலகொட பிரதேசத்தில் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தின் போது பேருந்தில் பயணிகள் இருந்ததாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தனியார் பேருந்துகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். விபத்து […]

You cannot copy content of this page

Skip to content