கராப்பிட்டிய வைத்தியசாலையின் இரு ஊழியர்கள் கைது
வைத்தியர் ஒருவரை தாக்கிய இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் கடமையாற்றும் விசேட வைத்தியரான கிரிஸாந்த பெரேராவை தாக்கிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் ஒருவர் காலி கொட்டவாகம பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் எனவும் மற்றையவர் அக்குரஸ்ஸ தியலபே பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சுகாதாரப் பணியாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற பணிப்புறக்கணிப்பில் புற்றுநோய் பிரிவின் ஊழியர்கள் கலந்து […]