ஐரோப்பா

ரஷ்யா-உக்ரேன் போரில் வடகொரியா ஈடுபடும் அபாயம்

  • September 6, 2023
  • 0 Comments

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரில் வடகொரியா ஈடுபடக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) ரஷ்யா செல்லத் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் உத்தேச ஆயுத ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடுவார் என்று கூறப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் மாநாட்டில் தலைவர்கள் இருவரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புட்டினுக்கு வெடிகுண்டுகளும் கவச வாகனங்களைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளும் தேவைப்படுகின்றன. அதற்குக் கைம்மாறாக மேம்பட்ட செயற்கைத் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Whatsapp அறிமுகப்படுத்திய அட்டகாசமான அம்சங்கள்.!

  • September 6, 2023
  • 0 Comments

உலகில் இருக்கும் ஆன்ட்ராய்டு பயனர்கள் முதல் ஐஓஎஸ் பயனர்கள் வரை, மெட்டா நிறுவனத்தின் செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு சேட் செய்வது மட்டுமல்லாமல், நினைவுகளை பரிமாறிக்கொள்வதற்காக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அதோடு குரூப் சேட், குரூப் கால் உட்பட பணப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளலாம். இதனை இன்னும் மேம்படுத்தும் விதமாக, மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிடுகிறது. அந்த அப்டேட்கள் பயனர்களுக்கு எதிர்பார்க்கும் […]

இலங்கை

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • September 6, 2023
  • 0 Comments

2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, இம்முறை 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அதற்கமைய 63.3 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். வௌியிடப்பட்ட உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய வணிகப் பிரிவில், கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க பாலிகா வித்தியாலயத்தின் தில்சரணி தருஷிகா நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியின் மனெத் பனுல பெரேரா இம்முறை கணித பிரிவில் நாடளாவிய ரீதியில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பெண் ஒருவருக்கு கணவன் செய்த கொடூரம்

  • September 6, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பெண் பொலிஸார் ஒருவர் வீதியில் வைத்து தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய அவரது முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். Savoie நகரில் இச்சம்பவம் வியாழக்கிழமை காலை La Croix-de-la-Rochette (Savoie) எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண் பெண் பொலிஸார் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் பிள்ளைகளை விட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட முயற்சித்த போது அவரை 61 வயதுடைய அவரது முன்னாள் கணவர் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் […]

இலங்கை ஐரோப்பா

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து – முற்றுகையிடும் பொலிஸார்

  • September 6, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சிரியா நாட்டவர்கள் அதிகளவில் வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் அண்மை காலங்களாக சிரியா நாட்டை சேர்ந்த அகதிகள் குழு நிலை குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றமை அதிகரித்துள்ளதாக தெரியவந்து இருக்கின்றது. இதுவரை காலங்களும் இவ்வாறு குழு நிலை குற்றவியல் சம்பவங்களில் கூடுதலாக லெபபனான் நாட்டை சேர்ந்தவர்கள் ஈடுப்பட்டிருந்துள்ளனர். அண்மை காலங்களாக சிரியா நாட்டை சேர்ந்த அகதிகளும் இவ்வகையான செயற்பாடுகளில் ஈடுப்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஒகஸ்ட் மாதம் எஸன் நகரத்தில் இவ்வகையான […]

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ஷர்களுக்கு தொடர்பில்லை – கொந்தளிக்கும் சகாக்கள்

  • September 6, 2023
  • 0 Comments

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்ஸக்களுக்கு தேவையற்றது என தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Channel 4 தொலைக்காட்சி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்று இரவு வௌியிடவுள்ள ஆவணம் குறித்தே அவர் இதனை தெரிவித்தார். Dispatches நிகழ்ச்சியின் கீழ் பிரித்தானிய நேரப்படி இன்றிரவு ஔிபரப்பாகவுள்ள ஆவணத்தின் முன்னுரையை Channel 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது தற்போதைய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் […]

செய்தி மத்திய கிழக்கு

குவைத்தில் விசா புதுப்பித்தல் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

  • September 5, 2023
  • 0 Comments

குவைத்தில் விசா புதுப்பித்தல் கட்டணத்தை அடுத்த ஆண்டு முதல் கடுமையாக உயர்த்த உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பது பரிந்துரை. இகாமா கட்டண உயர்வு தொடர்பான இறுதி அறிக்கை துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலாலின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன் பலமுறை இது போன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. குவைத்தில் தற்போதைய விசா […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் தாலிக்கொடியை திருடிச் சென்ற பெண்ணுக்கு பிணை

  • September 5, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டில் தாலிக்கொடி திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்தப் பெண்ணை பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. யாழ்ப்பாணம், சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றின் மேசையில் இருந்த தாலிக்கொடி காணவில்லை என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தினர். தாலிக்கொடி காணாமல் போன தினத்தன்று குறித்த வீட்டுக்குச் சென்ற உறவினர் பெண் ஒருவர் மீது வீட்டில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. […]

ஐரோப்பா செய்தி

ஆசையாய் வாங்கிய சூப்பில் இருந்த எலி!! கைகளை விரித்தது உணவகம்

  • September 5, 2023
  • 0 Comments

இங்கிலாந்தின் கென்ட் நகரைச் சேர்ந்தவர் சாம் ஹேவர்ட். அவரது காதலி எமிலி. சைனீஸ் ரெஸ்டாரண்டில் ஆசையாக ஒரு சூப் ஆர்டர் செய்தார். வீட்டிற்கு கொண்டு வந்து காளான் நூடுல் சூப் என்று அழைத்து காதலரிடம் கொடுத்தார். காதலன் சூப்பை வாங்கி ஆர்வத்துடன் பருகியிருக்கிறார். மூன்றில் இரண்டு பங்கு சூப் உள்ளே சென்றதும், சூப்பில் ஏதோ நகர்ந்தது. சாம் அதை கவனிக்கிறார், முதலில் இது ஒரு பெரிய காளான் என்று நினைக்கிறார். ஆனால் முதலில் ஒரு பெரிய வால் […]

செய்தி விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த குயிண்டன் டி காக்

  • September 5, 2023
  • 0 Comments

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக். இவர் 2021 டிசம்பரில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குயின்டன் டி காக் அறிவித்துள்ளார். தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 30 வயதான குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்காவுக்காக டி20 போட்டிகளில் மட்டும் விளையாடுவார். 140 போட்டிகளில் […]

You cannot copy content of this page

Skip to content