இலங்கை

இலங்கை : சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்!

  • October 29, 2024
  • 0 Comments

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், மத்திய வங்கியும் இது தொடர்பில் இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக எதிர்காலத்தில் முறையான முறைமை தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஒரு குறிப்பிட்ட முறைப்படி வாகன இறக்குமதி […]

வட அமெரிக்கா

அதிபர் தேர்தல் ; வரிசையில் நின்று ஹாரிசுக்கு வாக்களித்த பைடன்

  • October 29, 2024
  • 0 Comments

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு டெலவேர் மாநிலத்தில் வாக்களிப்பு நடந்து வருகிறது.இந்நிலையில், அக்டோபர் 28ஆம் திகதியன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரிசையில் நின்று ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு வாக்களித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. வாக்குச் சாவடி திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே 100க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றதாகவும் அவர்களில் ஒருவர் பைடன் என்றும் தெரிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் பைடன் தமக்குத் தாமே வாக்களித்துக்கொண்டார்.அப்போது அவரது மனைவி டாக்டர் ஜில் பைடனும் அவருடன் இருந்து […]

அறிவியல் & தொழில்நுட்பம் பொழுதுபோக்கு

விஜய் தனது சம்பளத்தை எப்படி வாங்குறார் தெரியுமா? போட்டுடைத்த தயாரிப்பாளர்

  • October 29, 2024
  • 0 Comments

நடிகர் விஜய் அரசியல்வாதி விஜய்யாக உருவெடுத்ததில் இருந்து அவர்மீது ஏகப்பட்ட விமர்சனங்களும் அவருக்கு வாழ்த்துகளும் என இரண்டும் சேர்ந்தே வந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் விஜய் தான் நடித்த படத்திற்கு எப்படி சம்பளம் வாங்கினார் என தயாரிப்பாளர் பேசியது பகீர் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் இதுவரை 68 படங்களில் நடித்துள்ளார். 69வது படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்துடன் தனது சினிமா வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாக கூறியுள்ளார். இதற்கிடையில் அக்டோபர் 27ஆம் தேதி தனது […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது

  • October 29, 2024
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலித் தகவல் வழங்கிய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் குருணாகல், வாரியப்பொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல், வாரியப்பொல பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கடந்த 27 ஆம் திகதி அன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும், விமான சேவை நிலையத்திற்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தகவல் வழங்கியுள்ளார். […]

பொழுதுபோக்கு

சிங்கம் போல கர்ச்சித்த விஜய்… “அவர இப்படி பார்த்ததே இல்ல” ராதிகா புகழாரம்

  • October 29, 2024
  • 0 Comments

தளபதி விஜயின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்ற முடிந்தது. தமிழக வெற்றிக்கழகம் சார்பாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் முதல்வர் வேட்பாளராக கலமிறங்குகின்றார். நேற்று தனது கட்சி மாநாட்டில் பேசிய தளபதி விஜய் பல விஷயங்களை பரபரப்பாக பேசியிருந்தது பலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு பெரிய ஆச்சரியங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் நடிகர் விஜயின் பேச்சு குறித்து தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பாடசாலைக்குள் நுழைந்த வாகனம் – மாணவர்கள் பலர் காயம்

  • October 29, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியா – மெல்போர்னின் கிழக்கில் Tooronga Rd இல் உள்ள ஆரம்பப் பாடசாலையில் மீது கார் மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதுவரை குறைந்தது எட்டு பொலிஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் விக்டோரியா ஆம்புலன்ஸ் துணை மருத்துவர்களும் அந்த இடங்களுக்கு வந்துள்ளனர் தொடக்கப் பள்ளிக்குள் கார் மோதியதில் 5 மாணவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. கார் வேலியில் மோதி, குழந்தைகள் அமர்ந்திருந்த கதிரையில் மோதி முன்னோக்கிச் சென்றதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. காயமடைந்த மாணவர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Apple நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு – iOS செயல்முறையைப் புதுப்பிக்குமாறு கோரிக்கை

  • October 29, 2024
  • 0 Comments

Apple நிறுவனம் அதன் கருவிகளில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. iOS செயல்முறையைப் புதுப்பிக்கும்போது அந்த அம்சங்களை எதிர்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டித்தன்மைமிக்கச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் Apple நிறுவனத்தின் புதிய வளர்ச்சி மிக முக்கியமான தருணத்தில் இடம்பெறுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். Google, Microsoft, Amazon, Apple போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ChatGPT முறையைப் போல தகவலளிக்கும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களைப் பயன்படுத்துகின்றன. இப்போதைக்கு Apple நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே […]

வாழ்வியல்

தூக்கமின்மை எனப்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள்

  • October 29, 2024
  • 0 Comments

நம் உடல் மன ஆரோக்கியம் இரண்டுக்கும் நல்ல தூக்கம் அவசியம். தூக்க சரியாக இல்லை என்றால் சோர்வு, எரிச்சல் உணர்வு ஏற்படுவதோடு, உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே, இரவில் அனைவரும் சரியாக தூங்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். அதிலும், 40 வயதிற்குப் பிறகு தூங்குவதில் சிரமம் அல்லது தூக்கமின்மை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இயற்கையாகவே, 40 வயதிற்குப் பிறகு, […]

பொழுதுபோக்கு

ஒரு படத்துக்கு 300 கோடி… விஜய்யை ஓவர்டேக் செய்த நடிகர் யார் தெரியுமா?

  • October 29, 2024
  • 0 Comments

இந்திய சினிமா வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்து வந்த நிலையில், தற்போது அவரை பிரபல நடிகர் பின்னுக்கு தள்ளி உள்ளார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்துக்காக ரூ.200 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். அவரை மிஞ்சும் வகையில் நடிகர் விஜய் கோட் படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். பின்னர் ஒருபடி மேலே போய் தன்னுடைய கடைசி படமான தளபதி 69-ல் நடிக்க நடிகர் விஜய் உச்சபட்ச சம்பளத்தை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் பொது இடங்களில் இலவச Wi-Fi பயன்படுத்தும் மக்களுக்கு விசேட எச்சரிக்கை

  • October 29, 2024
  • 0 Comments

இலங்கையில் பொது இடங்களில் இலவச Wi-Fi பயன்படுத்தும் மக்களுக்கு இலங்கை கணினி அவசர பதில் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலவச Wi-Fi பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. அவ்வாறான இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக தனது மன்றத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார். எனவே, பொது இடங்களில் […]