இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் தேர்தல் வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு

  • October 30, 2024
  • 0 Comments

இலங்கையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார். தெமட்டகொட பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது எமது நாடு மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். […]

செய்தி வாழ்வியல்

காலையில் எழுந்ததும் வயிற்றெரிச்சல் தொந்தரவு செய்கிறதா?

  • October 30, 2024
  • 0 Comments

அசிடிட்டி பிரச்சனை பொதுவான செரிமான பிரச்சனை தான். இரவில் அதிகமாக சாப்பிட்டால் அல்லது மிகவும் தாமதமாக சாப்பிட்டால் இந்த பிரச்சனை வரும். அதற்காக நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆரோக்கியமான பழம் சாப்பிட்டே அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் பெறலாம். வீட்டில் வாழைப்பழம் இருந்தால் அதனை சாப்பிடுங்கள். அமிலத்தன்மை பிரச்சனை சரியாகிவிடும். காலையில் வெறும் வயிற்றில் தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சனை இருக்காது. இதுதவிர அமிலத்தன்மை பிரச்சனைக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான […]

உலகம்

பிரபல நாடு ஒன்றில் ஐபோன் 16 கையடக்க தொலைபேசியை விற்பனை செய்ய தடை

  • October 30, 2024
  • 0 Comments

ஆப்பிளின் உள்நாட்டு முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தோனேசியா தவறியதை அடுத்து, இந்தோனேசியாவில் ஐபோன் 16 மாடல்களின் விற்பனையை ஆப்பிள் தடை செய்துள்ளது. இந்தோனேசியாவின் உள்நாட்டில் 40 சதவீத ஸ்மார்ட்போன் தேவையை பூர்த்தி செய்யாததால், அந்த போன்களை உள்நாட்டில் விற்க முடியாது என கடந்த 25ம் திகதி இந்தோனேசியாவின் தொழில்துறை அமைச்சகம் அறிவித்ததை அடுத்து ஆப்பிள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தோனேசியாவில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 95 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் உலகளாவிய […]

வட அமெரிக்கா

அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியில் ஏற்பட்ட கோளாறால் விபரீதம் – மக்கள் மீது வழக்கு

  • October 30, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியான JP Morgan தங்கள் வாடிக்கையாளர்கள் சிலர் மீது வழக்கு தொடுத்து வருகிறது. குறித்த வங்கியில் சிலவகையான கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாக வங்கி குறிப்பிட்டுள்ளது. வங்கியின் தானியக்க இயந்திரங்களிடமிருந்து அவர்கள் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான டொலர் ரொக்கத்தை எடுத்ததாகக் கூறப்பட்டது. அந்தக் கோளாறு குறித்து TikTok-இல் தெரியவந்தது. வங்கியின் வாடிக்கையாளர்கள் காசோலையில் ஒரு பெரிய தொகையைத் தங்களுடைய பெயரில் எழுதினர். அதை வங்கி நிராகரிப்பதற்குள் அவர்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

கனவுகளைப் பகிர்ந்து கொள்ளும் புதிய தொழில்நுட்பம்!

  • October 30, 2024
  • 0 Comments

நமது கனவில் நடக்கும் ஒரு நிகழ்வு உண்மையாக நடந்து இருக்கக்கூடாதா? என்று சில சமயம் ஏங்குவோம்… மேலும், நாம் கனவில் கண்டதை சம்பந்தபட்டவர்களிடம் நேரில் விவரிக்க முடியாதபடி திணறுவோம். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரெம்ஸ்பேஸ் (REMspace) தனது சிறப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரு நபர்கள் காணும் கனவுகளை பரிமாறிக்கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாக கூறுகிறது. இது கேட்பவர்களுக்கு புனைவுக்கதை அல்லது மாயாஜால வித்தைப்போன்று தோன்றலாம். ஆனால் இது நிஜ […]

செய்தி

இலங்கையின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தல்

  • October 30, 2024
  • 0 Comments

இலங்கையில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் மக்கள் தங்களது உடமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் தீபாவளி கொண்டாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபரால், சகல அனைத்து பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக […]

விளையாட்டு

ஆறுதல் வெற்றியை நோக்கி இந்திய அணி! பும்ராவுக்கு பதில் களமிறங்கும் ஹர்ஷித் ராணா?

  • October 30, 2024
  • 0 Comments

நியூஸிலாந்து அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணம் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. இந்த தொடரின் 3-வது மட்டும் கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் நவம்பர்-1 ம் திகதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது . இதற்கு முன்னதாக இந்த தொடரில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பல வருடங்கள் நீடித்து வந்த ரெக்கார்டையும் இந்திய அணி கைவிட்டது. அதாவது,12 வருடங்களாகச் சொந்த மண்ணில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் அதிகரிக்கும் அடிப்படைச் சம்பளம் – வெளியான அறிவிப்பு

  • October 30, 2024
  • 0 Comments

பிரான்ஸில் அடிப்படைச் சம்பளம் நவம்பர் முதலாம் முதல் அதிகரிக்கப்பட உள்ளது. வாரத்துக்கு 35 மணிநேரங்கள் பணிபுரியும் ஒருவருக்கு 2% சதவீதத்தால் இந்த அதிகரிப்பு இடம்பெறுகிறது. அடிப்படைச் சம்பளம் 11.88 யூரோக்களால் அதிகரித்து, 1,801,80 ஆக உயர்வடைகிறதாக அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த தொகை முதல்முறையாக 1,800 யூரோ வரம்புக்கு மேல் செல்லும் என்று பிரதமர் மிஷேல் பார்னியர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்தும் உத்தரவை கடந்த மாதம் 24ஆம் திகதி வெளியிட்ட நிலையில் அதனை பிரதமர் உறுதி […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் வாகனங்கள் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

  • October 30, 2024
  • 0 Comments

  ஜெர்மனியில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி உதவி வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு குறித்த ஊக்குவிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்ட போதும் அதனை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. திறைசேரியில் ஏற்பட்ட பண சுருக்கம் காரணமாக, பெருந்தொகை பணத்தை சேமிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. இந்நிலையில் மின்சாரத்தில் இயங்குகின்ற வாகனங்களை கொள்வனவு செய்தில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றமை குறைந்துள்ளது. இதனை அதிகரிக்கும் வகையில், புதிய ஊக்குவிப்பு நடவடிக்கையை […]

வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – 2 மாநிலங்களில் வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைப்பு

  • October 30, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 மாநிலங்களில் வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். நவம்பர் 5-ஆம் திகதி, அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள் முன்கூட்டியே வாக்கு செலுத்த ஏதுவாக பல இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் வாஷிங்டனிலும், ஆரிகனிலும் இரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பெட்டிகளுக்குள் விஷமிகள் தீயை கொளுத்தி போட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாக்குப்பெட்டிக்குள் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பான் கருவியால் நெருப்பு […]