ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பருவநிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • November 1, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியதவின் வானிலை ஆய்வுப் பணியகம் (BoM) மற்றும் CSIRO ஆகியவற்றால் வெளியிடப்பட்ட காலநிலை 2024 அறிக்கை காலநிலை மாற்றம் தொடர்பான சில ஆபத்தான நிலைமைகளை கண்டுபிடித்துள்ளது. புவி வெப்பமடைதல் அபாயத்தைக் குறைக்க கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பசுமை இல்லவாயு வெளியேற்றத்தை வெற்றிகரமாகக் குறைத்த 26 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும், மேலும் ஆஸ்திரேலியாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் 2005 உடன் ஒப்பிடும்போது 28.2 சதவீதம் குறைந்துள்ளது என்று அறிக்கை […]

ஆசியா

உலகின் வலிமையான ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா : மேற்குலக நாடுகளுக்கான எச்சரிக்கையா?

  • November 1, 2024
  • 0 Comments

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ள வடகொரியா, இதனை “உலகின் வலிமையானது” என வர்ணித்துள்ளது. குறித்த ஏவுகணையானது வட கொரியா சோதனை செய்த மற்ற ஆயுதங்களை விட அதிக மற்றும் நீண்ட தூரத்திற்கு பறந்துள்ளது. அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பைத் தாக்கக்கூடிய செயல்படும் ICBMகளை வைத்திருப்பதற்கு வட கொரியா கடைசியாக எஞ்சியிருக்கும் சில தொழில்நுட்பத் தடைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது என்பதை இது புலப்படுத்துவதாக வெளிநாட்டு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். வட கொரிய மத்திய செய்தி நிறுவனம் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் வடகொரிய இராணுவத்தினர் பயிற்சி- ஜெலன்ஸ்கி விடுத்த எச்சரிக்கை

  • November 1, 2024
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா ராணுவத்தினரை ஈடுபடுத்தும் ரஷ்யாவின் முடிவுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். வடகொரியாவுடன் ரஷ்யா வெளிப்படையாகக் கூட்டு வைத்துக்கொண்டு ஆயுதங்களையும், பீரங்கிக் குண்டுகளையும் வாங்கிக் குவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் எல்லையில் 3 ஆயிரம் வடகொரிய ராணுவத்தினருக்கு ரஷ்யா பயிற்சி அளித்து வருவதாகவும், விரைவில் அவர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஈடுபடுத்தும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் சீனா, […]

பொழுதுபோக்கு

அமரன் முதல் நாள் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

  • November 1, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தை உலகநாயன் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நேற்று வெளிவந்த அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த […]

வாழ்வியல்

மாரடைப்பு வருவதற்கு முன்னரே உடல் சொல்லும் அறிகுறிகள்!

  • November 1, 2024
  • 0 Comments

மாரடைப்பு என்பது தீவிர மருத்துவ அவசரநிலை, இது எதிர்பாராத விதமாக ஏற்படுகிறது. ஆனால், மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு உடல் அது தொடர்பான எச்சரிக்கையை கொடுக்கும். அதனை புரிந்துக் கொண்டால் ஆயுளை நீட்டிக்கலாம்.ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்துகொள்வது உண்மையிலேயே உயிரைக் காப்பாற்றும். மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தோன்றக்கூடிய முதல் 5 எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். மாரடைப்பு அறிகுறிகள் மனிதர்களின் வாழ்நாளை தீர்மானிப்பதில், இதய ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் […]

கருத்து & பகுப்பாய்வு

தீவிரமடைந்து வரும் காலநிலை பாதிப்பு : 5,70,000 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • November 1, 2024
  • 0 Comments

காலநிலை மாற்றம் கடந்த இரண்டு தசாப்தங்களில் 10 கொடிய தீவிர வானிலை நிகழ்வுகளை மோசமாக்கியது, இது 570,000 க்கும் அதிகமான மக்களின் இறப்புகளுக்கு பங்களித்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான அவசரத் தேவையையும் இது எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகம் தற்போது 3C வெப்பமயமாதலின் பாதையில் இருப்பதால், உயர்ந்து வரும் வெப்பநிலை மற்றும் மிகவும் தீவிரமான வானிலை காரணமாக பேரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறைந்தது […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை : முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கான பாதுகாப்பு குறைப்பு!

  • November 1, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. விஐபி பாதுகாப்பு அதிகாரிகளை பணியமர்த்துவதற்கு பொறுப்பான குழுவினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றத்தை பிரதிபலிக்கும் சுற்றறிக்கை, பதில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெனரலின் உத்தரவின் பேரில் சிறப்பு பாதுகாப்பு பிரிவின் துணை ஆய்வாளர் ஜெனரலின் பரிந்துரைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. பணியாளர்களைத் தவிர, பாதுகாப்பு விவரங்களில் இப்போது இரண்டு ஜீப்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் […]

இலங்கை

வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள இலங்கை தூதுவர்களை மீள அழைக்கும் அரசாங்கம்!

  • November 1, 2024
  • 0 Comments

இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்களின் தூதுவர்களாகவும் உயர்ஸ்தானிகர்களாகவும் கடமையாற்றிய 16 அரசியல் நியமனங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரம் தெரிவித்துள்ளது. இருப்பினும், திரும்ப அழைக்கப்படும் பணித் தலைவர்களின் பட்டியல் உடனடியாக கிடைக்கவில்லை. கிடைக்கப்பெற்ற ஆதாரத்தின்படி, இந்த பணித் தலைவர்களுக்கு ஏற்கனவே கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் 1 முதல் அவர்கள் நாடு திரும்பியதும், அந்தந்த நாடுகளில் அவர்களின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து அவர்களில் யாரையாவது மீண்டும் நியமிக்கலாமா வேண்டாமா […]

இலங்கை

இலங்கையில் கோர விபத்து – 2 பல்கலைக்கழக மாணவர்கள் பலி – 35 பேர் படுகாயம்

  • November 1, 2024
  • 0 Comments

பதுளை, துன்ஹிந்த வீதியில் 4ஆம் மைல்கல் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 35 பேர் காயமடைந்துள்ளனர். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது பேருந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் உட்பட 41 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் 2 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி

அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களித்த 62 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்

  • November 1, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆரம்ப வாக்களிப்பில், 62 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 40 சதவீதமாகும். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனல்ட் டிரம்ப்பிற்கும் இடையே போட்டி மிகக் கடுமையாய் இருப்பதாக ஆகக் கடைசிக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. தேர்தல் முடிவைத் தீர்மானிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் எந்தப் பக்கமும் சாயக்கூடிய ஏழு மாநிலங்களிலும்கூட யாருக்குச் செல்வாக்கு அதிகம் என்பதை உறுதியாகச் […]