ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : 20 சதவீதம் குறைக்கப்படும் கடன்கள்!

  • November 2, 2024
  • 0 Comments

இளம் ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மத்திய அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் மாணவர் கடன்கள் 20 சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. $27,600 சராசரிக் கடனைக் கொண்ட ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரி, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்பானிய அரசாங்கத்தின் கீழ் அடுத்த ஆண்டு அவர்களின் நிலுவையில் உள்ள கடனில் இருந்து சுமார் $5,520 ஐ இழப்பார் என தெரிவிக்கப்படுகிறது. பட்டதாரிகள் ஒவ்வொரு ஆண்டும் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையைக் குறைத்து, கடனைச் செலுத்துவதற்கு முன்பு அவர்கள் […]

பொழுதுபோக்கு

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர்

  • November 2, 2024
  • 0 Comments

பாலிவுட் மூலம் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் ரசிகர்களை சேர்த்துள்ளார் நடிகை ஜான்வி கபூர். இவர் நடிப்பில் Ulajh மற்றும் தேவரா முதல் பாகம் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளிவந்தது. ஜான்வி கபூர் என்றால் பலருக்கு தெரியாமல் இருக்கும். ஆனால் ஸ்ரீ தேவியின் மகள் தான் ஜான்வி கபூர் என்றால் தெரியாமல் இருக்க முடியாது. ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி கபூருக்கு தேவரா திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து ராம் […]

ஆப்பிரிக்கா

நைஜீரியாவில் காதலனை பழிவாங்க விஷம் வைத்த சிறுமி : மூன்று சிறுவர்களும் பலியான சோகம்!

  • November 2, 2024
  • 0 Comments

நைஜீரியாவில் முன்னாள் காதலனை பழிவாங்கும்நோக்கத்தோடு விஷம் கலந்த சூப்பை பருக கொடுத்த சிறுமி ஒருவரால் அவருடைய நண்பர்களும் பலியான சோகம் அரங்கேறியுள்ளது. நான்கு சிறுவர்களும் ஒரு சிறுமியும் உசைருவின் அஃபாஷியோவில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த இளம் பெண் மிளகு சூப்பில் விஷம் கலந்து தனது முன்னாள் காதலனுக்கு பழிவாங்கும் விதமாக அந்த உணவை கொடுத்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால் குறித்த ஆண் தனது மற்ற நண்பர்களுக்கும் அதனை பகிர்ந்து கொடுத்துள்ளார். இதனால் மற்ற மூவரும் […]

இலங்கை

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் நேரடி விமான சேவை!

  • November 2, 2024
  • 0 Comments

இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புதிய விமான சேவை நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டது. Edelweiss Airlines நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 251 சுற்றுலா பயணிகளுடன் நேற்று இலங்கையை வந்தடைந்தது. குளிர்கால வருகையுடன், சுவிட்சர்லாந்தில் சூரிச் மற்றும் கட்டுநாயக்கா இடையே தொடங்கிய புதிய விமானத்தின் முதல் விமானமாக Edelweiss Airlines இன் WK68 தாங்கிய A 330 விமானம் இலங்கையை வந்தடைந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், இந்த விமானம் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச்சிலிருந்து […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை முற்றுகையிட்ட ஆயுதமேந்திய பொலிஸார்!

  • November 2, 2024
  • 0 Comments

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆயுதமேந்திய போலீசார் முற்றுகையிட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானம் 954 அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் உள்ள Ezeiza சர்வதேச விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்திற்கே இவ்வாறு இடம்பெற்றுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்தில், கோர்டோபா மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த போது, ​​விமானம் திசை திருப்பப்பட்டு, அவசரமாக தரையிறங்குவதற்காக புறப்படும் விமான நிலையத்திற்குத் திரும்பியதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, விமானப் பணிப்பெண்கள் மற்றும் சில பயணிகள் விமானத்தின் சரக்கு பிடியிலிருந்து வரும் சத்தம் […]

ஐரோப்பா

10 வயது பிரிட்டிஷ்-பாகிஸ்தானிய சிறுமி கொலை வழக்கில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

  • November 2, 2024
  • 0 Comments

10 வயது நிரம்பிய பிரிட்டிஷ்-பாகிஸ்தானிய சிறுமியின் கொலை தொடர்பாக சிறுமியின் மூன்று குடும்ப உறுப்பினர்கள் மீதான வழக்கில் சிறுமி அனுபவித்த கொடூரமான துன்புறுத்தல் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளன. சாரா ஷரிஃப் என்ற அந்தச் சிறுமி 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென் இங்கிலாந்திலுள்ள வோக்கிங் பகுதியில் உள்ள தமது குடும்பத்தார் வீட்டுப் படுக்கை ஒன்றில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். சிறுமியின் உடல் முழுக்க எலும்பு முறிவுகள், கடிகள், தீக்காயங்கள் ஆகியவை இருந்தன. சிறுமியைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்பட்ட […]

இலங்கை

இலங்கையில் வேன்- லொறி நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் பலி 18 பேர் காயம்!

  • November 2, 2024
  • 0 Comments

நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர். நுவரெலியா – நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (01) இரவு 7 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் சமர்செட் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படும் மக்கள்!

  • November 2, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் ஹலோவின் கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிக்கும் இளைஞர் கும்பல்களால் சிலர் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எடின்பரோவின் Niddrie பகுதியில் உள்ள ஹே அவென்யூவில் தாக்குதல்கள் நடந்தன, இதனால் அந்த பகுதி “பூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இரவு நேரங்களில் வெளியே செல்வது அச்சத்தை தருவதாக உள்ளுர் மக்கள் தெரிவித்துள்ளனர். போன்ஃபயர் இரவுக்கு முன்னதாக, மேலும் தாக்குதல்கள் நடக்குமென அஞ்சுவதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழையும் 5 போட்டியாளர்கள்…

  • November 2, 2024
  • 0 Comments

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி விறுவிறுப்படைய 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசன் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், பெரிதாக இன்னும் நிகழ்ச்சி சூடுபிடிக்கவில்லை. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில், வைல்டு கார்டு எண்ட்ரியாக 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய விருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ரயான், […]

ஐரோப்பா

ஸ்பெயினில் அடுத்த பேரிடருக்கு தயாராகுமாறு அறிவித்தல்!

  • November 2, 2024
  • 0 Comments

ஸ்பெயினில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு பேரிடருக்கு தயாராகுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல சுற்றுலா தளமான மஜோர்க்கா  lockdown முறை மூலம் மக்கள் வீடுகளில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் வீடற்ற மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தேசிய வானிலை சேவையான ஏமெட், சுமார் மூன்று மணி நேரத்தில் 120 மிமீ மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.