இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை வழங்க தீர்மானம்!

  • November 7, 2024
  • 0 Comments

பொதுத் தேர்தலை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வரும்  13 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் திகதி திறக்கப்படும். வாக்கெடுப்பு நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகள் 12 ஆம் திகதி பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் பணிக்காகப் பாடசாலைகளை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகிய ட்ரம்பை வெள்ளை மாளிகைக்கு அழைத்த பைடன்

  • November 7, 2024
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்பை ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவர் அழைத்துள்ளார். அத்துடன், இந்த கலந்துரையாடலில் நிர்வாகத்தை மாற்றுவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்துவதாக உறுதியளித்தமையானது தொழிற்துறையினர் மத்தியில் பாரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, நேற்றையதினமே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்தநிலையில், உலகின் மிகப்பெரிய கடல் காற்று மேம்படுத்தல் நிறுவனமான […]

ஆஸ்திரேலியா

சிறுவர்களுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்யும் அவுஸ்ரேலியா!

  • November 7, 2024
  • 0 Comments

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த முன்மொழிவுடன் கூடிய புதிய சட்டங்கள் அடுத்த வாரம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார். சமூக ஊடகங்கள் மூலம் அவுஸ்திரேலிய குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் இந்த புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. “எங்கள் தந்தை மற்றும் தாய்மார்களுக்கு இது வருத்தமளிக்கிறது, என்னைப் போலவே, அவர்களின் குழந்தைகளும் இணையத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய பெற்றோருக்கு […]

செய்தி

வீட்டுக் கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலிய மக்கள்

  • November 7, 2024
  • 0 Comments

மெல்பேர்னில் வீட்டு விலைகளில் ஓரளவுக்கு குறைவடைந்துள்ள போதிலும், ஈட்டிய வருமானத்திற்கு ஏற்ப வீடு வாங்குவதற்கு பெறக்கூடிய கடன் தொகையை குறைப்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022 மே முதல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரி வருமானத்தை விட இரண்டு மடங்கு வருமானம் ஈட்டும் ஒரு குடும்பத்திற்குக் கிடைக்கும் கடன் தொகை 307,000 டொலர் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சராசரி வருமானம் ஈட்டும் நபருக்குக் கிடைக்கும் கடன் தொகையும் 132,000 டொலர் […]

ஆசியா

microwave கற்களை பயன்படுத்தி செயற்கைக் கோள்களை அழிக்க திட்டமிடும் சீனா!

  • November 7, 2024
  • 0 Comments

மைக்ரோவேவ் கற்றைகளைப் பயன்படுத்தி ஒரு ஆயுதத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி சுற்றுப்பாதையில் எதிரிகளின் செயற்கைக்கோள்களை அழிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் இது எதிர்காலத்தில் சாத்தியமான இராணுவ பயன்பாட்டிற்கான சோதனைகளில் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார் வார்ஸில் கிரகங்களை அழிக்க லேசர்கள் மூலம் இயக்கப்படும் ஆயுதங்களை பயன்படுத்துவதுபோன்று உருவாக்கப்பட்ட புனைக்கதைகளை சீன விஞ்ஞானிகள் தற்போது உண்மையாக்கியுள்ளனர். ஆயுதங்கள் வெற்றிகரமாக இருந்தால், கணினிகள், ரேடார்கள் அல்லது செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சீர்குலைக்கும் திறன் […]

செய்தி

மூளையை பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு… சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

  • November 7, 2024
  • 0 Comments

வைட்டமின் பி 12 உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்து ஆகும். இரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் வைட்டமின் பி12, டிஎன்ஏ, மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு அவசியம். வைட்டமின் பி12 குறைபாட்டால், மூளையின் செயல்பாடு குறைகிறது. டிஎன்ஏ சேதமடைகிறது மற்றும் உடலில் இரத்தம் குறையத் தொடங்குகிறது. பி12 குறைபாடு எலும்புகளிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது, இந்நிலையில், வைட்டமின் பி 12 குறைப்பாட்டை நீக்கவும், வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் உதவும் உணவுப் பொருட்களை […]

ஐரோப்பா

ஸ்பெயின் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ள 89 பேர் : துரித கதியில் இடம்பெறும் மீட்பு பணிகள்!

  • November 7, 2024
  • 0 Comments

வலென்சியா வெள்ளத்தைத் தொடர்ந்து குறைந்தது 89 பேரைக் காணவில்லை என்று ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேடுதல் பணி ஒன்பதாவது நாளாகத் தொடங்கிய நிலையில், நகரின் துரியா நதியை சுற்றி தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. த்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை நேற்று இரவு 217 ஆக அதிகரித்துள்ளது. இதில் மூன்று பிரித்தானியர்களும் அடங்குவர்.  மேலும் 400,000 பேர் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

எனது போராட்டம் முடியவில்லை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பின் கமலா

  • November 7, 2024
  • 0 Comments

ஜனாதிபதி தேர்தல் முடிந்தாலும் எனது போராட்டம் முடியவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதியாக செயற்பட்ட கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஹோவர்ட் (Howard) பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் நிறைவுக்கு வந்தாலும் தமது போராட்டம் முடிவுறவில்லை என்று ஹாரிஸ் அவரது ஆதரவாளர்களிடம் கூறினார். அவரின் ஆதரவாளர்கள் பலர் கண்ணீருடன் காணப்பட்டனர். பெண்களின் உரிமை, துப்பாக்கி வன்முறைக்கு எதிரான போராட்டம், கண்ணியம் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து போராடப்போவதாக அவர் உறுதியளித்தார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள […]

செய்தி

இலங்கை பொதுத் தேர்தல் : நிறைவு பெறும் பிரசார நடவடிக்கைகள் – வாக்காளர்களுக்கு எச்சரிக்கை!

  • November 7, 2024
  • 0 Comments

இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு வரும் 14-ம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்றும் (07) நாளையும் (08) மேற்கொள்ளப்படவுள்ளன. ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிக்க முடியாத முப்படை முகாம்கள் மற்றும் […]

செய்தி

AI தொழில்நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்துவதன் சாதக பாதகங்கள்

  • November 7, 2024
  • 0 Comments

தொழில்நுட்பம் நம் அனைவரது வாழ்விலும் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி வருகிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கல்வித்துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்கள் தங்கள் கற்றல் செயல்பாட்டில் AI கருவிகளைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைப்பதுடன், சில சவால்களும் எழுகின்றன. இந்தப் பதிவில், AI தொழில்நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். நன்மைகள்: AI அடிப்படையிலான கற்றல் தளங்கள் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட கற்றல் வேகம் மற்றும் பாணியைப் […]