இலங்கை செய்தி

வவுனியாவில் மண்வெட்டியால் அடித்து பெண் படுகொலை

  • November 9, 2024
  • 0 Comments

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் அம்மிவைத்தான் பகுதியை சேர்ந்த வெற்றிமலர் (வயது 57) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அவ்வேளை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் மண்வெட்டியால் தாக்கி விட்டு , அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை பெண் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை […]

பொழுதுபோக்கு

நெல்சன் திலீப்குமார் பிடித்த மற்றுமொரு திமிங்கலம்… பாருங்கள்…

  • November 9, 2024
  • 0 Comments

இந்திய அளவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார். பீஸ்ட் படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து. இதனால் நெல்சன் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதனை ஜெயிலர் படத்தின் மூலம் தகர்த்தெறிந்து இன்று முன்னணி இயக்குனராக மாறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக ஜெயிலர் 2 உருவாகவுள்ளது. இப்படத்திற்கான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும், ஜெயிலர் 2 உருவாகுவது என்பது உறுதி என திரை […]

உலகம்

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கனடாவின் வடக்கு யூகோன் பகுதியில் நேற்று இரவு 8.06 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி விளையாட்டு

SLvsNZ – இலங்கை அணிக்கு 136 ஓட்டங்கள் இலக்கு

  • November 9, 2024
  • 0 Comments

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றுள்ளது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Michael Bracewell மற்றும் Zakary Foulkes ஆகியோர் தலா 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன் […]

இலங்கை

இலங்கை முழுவதும் 12 மாவட்டங்களில் விசேட தட்டம்மை தடுப்பூசி திட்டம் ஆரம்பம்

இலங்கை முழுவதும் 12 மாவட்டங்களில் விசேட தட்டம்மை தடுப்பூசி திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. UNICEF மற்றும் WHO ஆகியவற்றின் ஆதரவுடன் சுகாதார அமைச்சகத்தால் இந்த நான்கு வாரத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்மை தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டுமே பெற்ற 20 முதல் 30 வயதுடைய இளைஞர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் தடுப்பூசி அமர்வு நவம்பர் 9, 2024 அன்று தலங்கம பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது, இதில் சுகாதார அமைச்சின் செயலாளர் டி. […]

இலங்கை

இலங்கையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – அனுரகுமார!

  • November 9, 2024
  • 0 Comments

நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இதற்கான வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் ஒரு சில காவல்துறை அதிகாரிகளின் ஆதரவுடனும், ஆசிர்வாதத்துடனும் போதைப்பொருள் வியாபாரம் […]

மத்திய கிழக்கு

லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் ஏழு பேர் பலி! லெபனான் சுகாதார அமைச்சகம்

லெபனானின் கடலோர நகரமான டயர் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 46 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் கொல்லப்பட்ட ஏழு பேரில் இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குவதாக அமைச்சகம் அறிவித்துள்ளது. இது வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நடந்ததாக லெபனானின் அரசு செய்தி நிறுவனம் கூறியது. மீட்புக் குழுக்கள் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்டு வருவதாகவும், தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம்

லிபியாவில் இடிந்து விபத்துக்குள்ளான குடியிருப்பு கட்டிடம் – குழந்தைகள் 7 பேர் பலி!

  • November 9, 2024
  • 0 Comments

லிபிய தலைநகர் திரிபோலிக்கு மேற்கே உள்ள ஜான்சூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தங்கியிருந்து வந்தனர். நேற்றிரவு அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிடம் இடிந்ததில், தூங்கிக்கொண்டிருந்தவர்கள இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். அவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிலர் […]

இலங்கை

இலங்கையில் 30 சதவீதத்திற்கு மேல் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

  • November 9, 2024
  • 0 Comments

மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இன்று (09.11) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒன்றரை வருடத்தில் மின்சாரத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். மின்கட்டணத்தை 30%க்கு மேல் குறைப்போம்.அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். எரிபொருள் விலையை கூட குறைக்க கால அவகாசம் வேண்டும்.நாங்கள் இவற்றைச் செய்வார்.

இலங்கை

பல ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து : வெளியான அறிவிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பல விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சமீபத்திய நாட்களில் பல விமானங்களை ரத்து செய்துள்ளதாக விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் குழுக்கள் சிக்கல்களைத் தீர்க்கவும், வழக்கமான விமான அட்டவணையை மீட்டெடுக்கவும் பணிபுரியும் போது, ​​பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க ரத்து செய்வது அவசியம் என்று விமான நிறுவனம் கூறியது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு மற்றும் ஹோட்டல் தங்கும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது, வாடிக்கையாளர்களின் பொறுமைக்கு நன்றி தெரிவித்து, இடையூறுகளுக்கு மன்னிப்புக் […]