இலங்கை

இலங்கையில் உரிமையாளர் இன்றி கண்டுப்பிடிக்கப்பட்ட சொகுசு கார்!

  • November 10, 2024
  • 0 Comments

கிம்புலாபிட்டிய – விமான நிலைய வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து அடையாளம் தெரியாத சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வாகனம் வீட்டின் கடை அறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் வாகனம் கட்டானா காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சொகுசு கார் அசெம்பிள் செய்யப்பட்ட வாகனமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்படி, நீதிமன்றத்தில் உண்மைகளை அறிக்கை செய்த பிறகு, காரை சுங்கத் துறைக்கு […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

  • November 10, 2024
  • 0 Comments

சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த மருதானையைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த நபரின் கைப்பையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 05 கிலோ கிராம் குஷ் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

முக்கியமான 25 பேருக்கு விருது வழங்கும் விஜய்.. யார் அவர்கள்?

  • November 10, 2024
  • 0 Comments

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பிப்ரவரியில் தொடங்கி, இக்கட்சியின் முதல் மா நாட்டை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் விஜய் பிரமாண்டமாக நடத்திக் காட்டினார். இம்மாநாட்டைத் தொடர்ந்து அவர் தமிழ் நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் செய்து, நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து, தேர்தலுக்கு இப்போதில் இருந்தே தயார்படுத்தப் போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தவெகவின் மாநாட்டில் கூடிய கூட்டம்தான் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியதே தவிர, […]

வட அமெரிக்கா

கனடாவில் இந்து கோயில் மீது தாக்குதல்; காலிஸ்தானிய ஆதரவாளர் கைது

  • November 10, 2024
  • 0 Comments

கனடாவில் உள்ள இந்து கோயில் ஒன்றில் அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் வந்திருந்தோரைத் தாக்கினர்.அந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்த காலிஸ்தானிய ஆதரவாளர் இந்தர்ஜித் கோசல் கைது செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று (நவம்பர் 9) வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 4) பிரேம்ப்டன் நகரில் உள்ள இந்து கோயில் ஒன்றில் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது பக்வருகை தந்திருந்தோர் தாக்கப்ப்டடனர். பிரேம்ப்டன், டொரொன்டோ நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.அதன் தொடர்பில் 35 வயது இந்தர்ஜித் கோசல் கைது செய்யப்பட்டதாகவும் வெள்ளிக்கிழமையன்று […]

இலங்கை

இலங்கை : அம்பலாங்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

  • November 10, 2024
  • 0 Comments

அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர். டி -56 துப்பாக்கியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அத்துடன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற முரண்பாடே துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பா

ஸ்பெயின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் : மக்கள் முன்வைக்கும் கோரிக்கை!

  • November 10, 2024
  • 0 Comments

ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளம் அதனால் ஏற்பட்ட அழிவுகளை தொடர்ந்து மக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டகாரர்கள் கோரியுள்ளனர். “எங்கள் கைகள் சேற்றால் கறைபட்டுள்ளன, உங்களுடையது இரத்தத்தால் கரைப்பட்டுள்ளது என்ற வாசகங்களையும் காட்சிப்படுத்தியுள்ளனர். கடந்த மாத வெள்ளம், நாட்டைத் தூண்டிவிட்டு, ஒரு பெரிய தூய்மைப்படுத்தும் முயற்சி தேவைப்படுகிறது, இது ஐரோப்பாவில் பல தசாப்தங்களாக மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும்.

ஆசியா

இந்தோனேசிய அதிபர் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவின் ஷி-யுடன் சந்திப்பு

  • November 10, 2024
  • 0 Comments

சீனா முக்கிய நண்பர், பங்காளி என்று இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார். அக்டோபர் 20ஆம் திகதி பதவியேற்ற பிறகு முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு சீனா சென்ற பிரபோவோ, நவம்பர் 9ஆம் திதிக பெய்ஜிங்கில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார். பிரபோவோவின் முதல் பயணம் சீனாவாக இருப்பது ஆச்சரியமல்ல என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சீனாவுடனான உறவை வலுப்படுத்தும் தெளிவான அறிகுறியாக பிரபோவோவின் பயணம் பார்க்கப்படுகிறது. இந்தோனீசியாவின் ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் அதன் […]

பொழுதுபோக்கு

முன்னணி நடிகர்களுக்கு இணையாக கேரளாவில் சிவா படைத்த சாதனை

  • November 10, 2024
  • 0 Comments

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் அமரன். இப்படத்தில் சிவாவுடன் இணைந்து சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தை ரூ.200 கோடி பிரமாண்ட பொருட்செலவில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேசனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் லிஸ்டில் தி கோட், வேட்டையன் ஆகிய படங்களைத் தொடர்ந்து அமரன் படமும் இடம்பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவாயின் கேரியரில் இப்படம் புதிய மார்க்கெட்டை திறந்துவிட்டிருப்பதால், […]

இலங்கை

இலங்கை வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்

  • November 10, 2024
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வு குறித்துக் கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழு, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள், நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான முந்தைய ஒப்பந்தங்களின் அமுலாக்கம் போன்றவற்றை மதிப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

வாழ்வியல்

தினமும் 20 நிமிடம் நடந்தால் ஏற்படும் நன்மை – ஆய்வில் தகவல்

  • November 10, 2024
  • 0 Comments

பரபரப்பான வாழ்க்கை முறைச் சூழலால் உடல் ஆரோக்கியத்தில் பலரும் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். சிலருக்கு இளம் வயதிலேயே உடல் ரீதியாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவேதான் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பலருக்கும் நேரமின்மை என்பது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் அதற்காக நேரத்தை ஒதுக்குவது அவசியம். அந்தவகையில் 5 நிமிட கூடுதல் உடற்பயிற்சிகூட ரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கலாம் என்கிறது சமீபத்தில் ஓர் ஆய்வு. ‘சர்குலேஷன்’ […]