அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp ஸ்பேம் குழுக்களில் சிக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகள்

  • November 12, 2024
  • 0 Comments

ஸ்பேம் செய்திகளின் தொல்லையில் இருந்து தப்ப வாட்ஸ்அப் செட்டிங்கை சரிசெய்தால் போதும். சிறிய பிரைவசி செட்டிங் மாற்றம் மூலம் விரும்பத்தகாத வாட்ஸ்அப் குரூப்களில் உங்கள் எண் சேர்க்கப்படுவதை தவிர்க்க முடியும். வாட்ஸ்அப்பில் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று Privacy என்பதைத் தேர்வுசெய்யவும். அதில் Group என்பதை தேர்வு செய்து, பின் “Who Can Add Me to Groups?” என்பதை கிளிக் செய்யவும். இந்தப் பகுதியில் யார் யார் உங்ககளை வாட்ஸ்அப் குழுக்களில் இணைக்கலாம் என்பதை முடிவு செய்யலாம். […]

செய்தி

பெரிய காயத்தில் இருந்து தப்பிய ரஷித் கான்!

  • November 12, 2024
  • 0 Comments

வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், தலையில் கடுமையான காயத்திலிருந்து தப்பித்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் ஐயா ஜஸ்ட் மிஸ் என நகைச்சுவையாக தெரிவித்து வருகிறார்கள். போட்டியில், பங்களாதேஸ் அணியின் இன்னிங்கிஸின் போது ரகமனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்) பந்தை தடுக்க ஓடிக்கொண்டிருக்கும் போது, அதே நேரத்தில் ரஷித் கானும் அந்த பந்தை நான் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பாடசாலை மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த காட்டுப்பன்றி

  • November 12, 2024
  • 0 Comments

பிரான்ஸில் பாலர் பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்த காட்டுப்பன்றியினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுப்பன்றியினால் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் வியாழக்கிழமை இச்சம்பவம் Marseille மாவட்டத்தின் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Loup நகரசபை பாலர் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. காலை 8.30 மணி அளவில் வகுப்புகள் முழு வீச்சில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென பாடசாலை வளாகத்துக்குள் காட்டுப் பன்றி ஒன்று நுழைந்துள்ளது. இதனால் பாடசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பாடசாலை கட்டிடத்துக்குள் வைத்து தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் போக்குவரத்து விதிகளில் மாற்றங்கள் – விரைவில் புதிய நடைமுறை

  • November 12, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் போக்குவரத்து விதிகளில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் சட்டமூலத்தை உள்துறைத் துணையமைச்சர் முகமதுபைஷல் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ளார். மாற்றங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால் வாகனமோட்டிகள் புரியும் குற்றங்களுக்கு நீதிமன்றங்கள் தண்டனைகளில் குறைப்புகள் மேற்கொள்ள முடியும். முதன்முறை கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியவர்களுக்குக் கட்டாய குறைந்தபட்சத் தண்டனையை அகற்றுவது பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களில் ஒன்றாகும். மறுமுறை குற்றம் புரிவோருக்கான கட்டாய குறைந்தபட்சத் தண்டனையும் குறைக்கப்படும். மரணத்தை விளைவிக்கும் குற்றங்களுக்கு 4 ஆண்டுகளுக்குப் பதில் 2 ஆண்டுகளும் கடுமையான காயத்தை விளைவிக்கும் குற்றங்களுக்கு […]

ஐரோப்பா செய்தி

அதிகளவான வெளிநாட்டு பணியாளர்கள் தேவை – ஐரோப்பிய நாடொன்றின் அதிரடி அறிவிப்பு

  • November 12, 2024
  • 0 Comments

ஐரோப்பிய நாடான குரோஷியாவில் அதிகளவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பி இருப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார. நாடு முழுவதும் பல துறைகளில் குரோஷியா கையாளும் தொழிலாளர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இதனை கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, குரோஷியாவின் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை என்று அமைச்சர் மேலும் வலியுறுத்தினார். மேலும் வெளிநாட்டினரை வரவேற்க நாடு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நமது பொருளாதாரத்திற்கு அவர்கள் தேவை. குரோஷியா சுற்றுலா மற்றும் கட்டுமானம் முதல் சேவை நடவடிக்கைகள் வரை பல […]

இலங்கை செய்தி

இலங்கை மக்களை ஏமாற்றி வருவதாக ஜனாதிபதி அநுர மீது குற்றச்சாட்டு

  • November 12, 2024
  • 0 Comments

  இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தொடர்ந்தும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இனை தெரிவித்துள்ளார். மஹரகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கையூட்டல் ஊழல் ஒழிக்கப்படும், எரிபொருள் விலை குறைக்கப்படும் என தற்போதைய ஜனாதிபதி சகல தேர்தல் மேடைகளிலும் கூறினார். எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்குச் சலுகைகளைத் தருவதாகக் கூறிய அவர் தற்போது மக்களை ஏமாற்றி வருகிறார். தற்போது மின்சார […]

உலகம் செய்தி

புளோரிடாவில் இருந்து ஹைட்டி வந்த பயணிகள் விமானம் மீது துப்பாக்கிச் சூடு

  • November 11, 2024
  • 0 Comments

அமெரிக்காவிலிருந்து வந்த பயணிகள் விமானம் போர்ட்-ஓ-பிரின்ஸில் தரையிறங்க முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடந்ததை தொடர்ந்து பல விமான நிறுவனங்கள் ஹைட்டிக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன. புளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேலில் இருந்து ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானம் 951 அண்டை நாடான டொமினிகன் குடியரசிற்கு திருப்பி விடப்பட்டது, அங்கு அது சாண்டியாகோ விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஒரு விமானப் பணிப்பெண் லேசான காயம் அடைந்தார், பயணிகள் யாரும் காயமடையவில்லை என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ஜப்பான் பிரதமர் இஷிபா

  • November 11, 2024
  • 0 Comments

ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ஷிகெரு இஷிபாவை தலைவராகத் தொடர்ந்தும் செயற்பட வாக்களித்துள்ளனர். கடந்த மாதம் நடந்த கீழ்சபைத் தேர்தலில் ஷிகெரு இஷிபாவின் ஊழல் களங்கப்பட்ட கூட்டணி அதன் நாடாளுமன்றில் பெரும்பான்மையை இழந்த நிலையில் ஜப்பானிய சட்டமியற்றுபவர்களின் மேற்கண்ட முடிவு வந்துள்ளது. சீனா மற்றும் வட கொரியாவுடன் பதட்டங்கள் அதிகரிக்கும் அதே வேளையில், ஜப்பானின் முக்கிய கூட்டாளியான அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்தைப் பெறவுள்ள நிலையில் 67 வயதான, இஷிபா தற்போது பலவீனமான சிறுபான்மை அரசாங்கத்தை […]

இலங்கை செய்தி

நடு வீதியில் ஹரின் பொலீசாருடன் ஆவேசம்

  • November 11, 2024
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னான்டு தனது சகாக்களுடன் இன்று பதுளை நகரில் சட்டத்துக்கு முரணாக தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டபோது போது பொலீசார் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அதனை தடுத்ததினால் இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதத்தில் ஏற்பட்டது இதனால் பதுளை நகர மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நகரில் இவர்கள் பட்டாசு கொளுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்தவாறு ஊர்வலம் செல்ல முற்பட்டதால் அதிகாரிகள் முயற்சிக்கு தடை விதித்துள்ளனர். இதனால் முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டுவுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் […]

உலகம் செய்தி

வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தலுக்கு தயாராகும் ட்ரம்ப்

  • November 11, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி உள்ள அனைத்து புலம் பெயர்ந்தோரையும் நாடு கடத்த அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ட்ரம்பின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் திட்டத்துக்கு இணங்க இவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ளதாகவும் இதற்காக இத்துறையில் அனுபவம்மிக்க ICE இயக்குனர் டோம் ஹாமனை ட்ரம்ப் நியமித்து உள்ளதாகவும் சர்வதேச ஊடக தகவல்கள்தெரிவிக்கின்றன.