சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கிய வடகொரியா?
சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கியதாக வடகொரியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது .
இங்கிலாந்து உளவுத்துறை அந்த குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் புகைப்படங்களை ஐ.நா நிபுணர்களுக்கு அனுப்பியதாக ஆண்ட்ரூ ரோத் தெரிவித்துள்ளார்.
மேலும், வடகொரியா நடத்திவரும் அணு ஆயுத சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கு எதிராக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில் ரஷியாவுடனான நல்லுறவை வடகொரியா பலப்படுத்தி வருகிறது.
அமெரிக்காவை எதிா்கொள்ளும் வகையில் ரஷியாவுடனான உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)