வட்டி விகிதத்தை குறைக்காத வங்கிகள் குறித்து விசேட அவதானம் : ரஞ்சித் சியம்பலாபிட்டிய!
இதுவரையில் வங்கி வட்டி வீதத்தை குறைக்காத வர்த்தக வங்கிகள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவிசாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அண்மையில் மத்திய வங்கியினால் வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. சுற்றறிக்கையின் பிரகாரம் வங்கி வட்டி வீதத்தை இதுவரை குறைக்காத வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தி வருகிறது.
மக்களின் அவல நிலையை கருத்திற் கொண்டு மத்திய வங்கி வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளதால் அனைத்து அரச மற்றும் தனியார் வர்த்தக வங்கிகள் நிதி நிறுவனங்களும் மேற்படி சுற்றறிக்கைக்கு இணங்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் .
எனவே, அந்த வங்கிகளின் வட்டி விகிதத்தை குறைக்க உடனடியாக கடுமையான மற்றும் நேரடி விசாரணை நடத்தப்படும்” எனக் கூறினார்.