வடக்கு காசா பகுதியை தாக்க தயாராகியுள்ள இஸ்ரேல் இராணுவம்
காசா பகுதியின் வடக்கு பகுதியில் வசிக்கும் 1.1 மில்லியன் பாலஸ்தீனியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டது.
24 மணி நேரத்திற்கு முன்பே, காசா பகுதியின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
காசா பகுதியின் வடக்குப் பகுதியில் இருந்து தப்பிச் செல்லும் பாலஸ்தீன குடிமக்களின் கார்கள் மீதும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீன ஆணையம் கூறியுள்ளது.
ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களைத் தேடி காசா பகுதியின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட குழுவில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் இஸ்ரேலிய இராணுவ வீரர்களும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பணயக்கைதிகளை தேடும் போது காசா பகுதியின் வடக்கு பகுதியை ஹமாஸ் போராளிகளிடம் இருந்து முழுமையாக விடுவிப்பதாக இஸ்ரேல் அரசு வெளியிட்ட அறிக்கை காட்டுகிறது.