ஜெர்மனியில் அகதிகளுக்காக அறிமுகமாகும் புதிய பண அட்டை
அகதிகள் விடயம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் ஆளும் கூட்டு கட்சியானது தற்பொழுது பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் ஜெர்மனியின் பிரதான எதிர்கட்சியான C D U கட்சியுடைய முக்கிய அரசியல் வாதியான ஜேமஸ் பான் அவர்கள் அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பல உள்நாட்டு அமைச்சர்கள் அகதிகள் விடயத்தில் எடுத்த புதிய முடிவை கண்டித்து இருக்கின்றார்.
அதாவது இந்த முடிவின் படி போதுமான பயனை பெறமுடியாது என்றும்,
அதாவது ஐரோப்பிய ஒன்றியத்துடைய வெளி எல்லைகளில் வைத்து அகதிகளுடைய விடயத்தை கவனிக்க வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்துடைய அமைச்சர்கள் எடுத்த முடிவு ஆகும்.
இந்நிலையில் இந்த முடிவை தவிர்த்து ஐரோப்பிய ஒன்றியமானது குறிப்பிட்ட தக்க அகதிகளை வருடம் ஒன்றுக்கு உள்வாங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கின்றார்.
ஜெர்மனியின் பல நகரங்கள் எதிர்வரும் காலங்களில் அகதிகளுக்கு நேரடியாக அவர்களுக்கு வழங்கப்படும் பணத்திற்கு பதிலாக பெற்றால் காட் என்று சொல்லப்படுகின்ற ஒரு புதிய பண அட்டையானது நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கனோவர் மற்றும் பயண் மாநிலமானது அகதிகளுக்கு எதிர் வரும் காலங்களில் வழங்கப்படுகின்ற அதிஉயர் தொகையானது 182 யுரோ டசன் கில்டை பெசாட் காட் என்று சொல்லப்படுகின்ற ஒரு அட்டை மூலம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்வரும் காலங்களில் நிர்வாக செலவுகளை குறைக்க முடியும் என்றும் கூடுதலான நேரத்தை மிகுதிப்படுத்த முடியும் என்றும் இந்த இரு மாநிலங்களும் தெரிவித்துள்ளன.