இலங்கையின் அடுத்தக் கட்டம் நெருக்கடியாக இருக்கும் என எச்சரிக்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்து விட்டதாக தெரிவித்து மகிழ்ச்சியை சிலர் வெளிப்படுத்தினாலும் அடுத்த கட்டம் கடினமானதாகவே இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை இணங்கியுள்ளதற்கு அமையவே சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கியுள்ளது. அந்த நிபந்தனைகளை நிறைவு செய்யாமல் விடும் பட்சத்தில் அடுத்த கட்டம் சிரமமமானதாகவே அமையும். அடுத்தக் கட்டத்தில் நிதி கிடைக்காமலும் போகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிலைமை தொடர்பான புரிதல் இல்லாதவர்களை அருகில் வைத்துக் கொண்டதன் காரணமாக நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றது என்றும் அவர் கூறினார்.
(Visited 12 times, 1 visits today)