ஐரோப்பா

கனடாவில் காணாமல் போன தமிழர்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

ஒன்ராறியோ – Vaughan நகரில் இருந்து காணாமல் போன 43 வயதுடைய திவாகர் பரம்சோதியை கண்டுபிடிப்பதில் பொது உதவியை நாடியுள்ளனர்.யோர்க் பிராந்திய பொலிஸ் #4 மாவட்ட குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் புலனாய்வாளர்கள்.

கடந்த ஜூன் 19 ஆம் திகதியில் இருந்து இவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடைசியாக கடந்த 19ஆம் திகதி மாலை 6 மணியளவில் தனது குடும்பத்தினருடன் பேசியதாகவும், அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கடைசியாக அவர் டொராண்டோவின் நகர்ப் பகுதியில் இருந்ததாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நபர் 5’5′ அடி உயரம் கொண்டவரும், கடைசியாக சிவப்பு மற்றும் கருப்பு நிற உடை அணிந்திருந்ததாகவும், காக்கி பேன்ட் மற்றும் பிரவுன் நிறபாதணி அணிந்திருந்தார் காவல்துறையினர் அடையாளப்படுத்தியுள்ளனர்.

காணாமல் போன நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் 1-866-876-5423 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் அவர் தொடர்பான முழுமையான தகவல்களை பெற இங்கே அழுத்தவும்

 

(Visited 17 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!