IPL Match 05 – குஜராத் அணிக்கு 244 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். 2025 சீசனின் 5வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் மிரட்டினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். கடைசி கட்டத்தில் இறங்கிய சஷாங்க் சிங் அதிரடி காட்டினார்.
இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து, 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
(Visited 2 times, 1 visits today)