120 உக்ரைன் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

130 ரஷ்ய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, ஒரே இரவில் 126 உக்ரைன் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவும் கூறியுள்ளது.
வோல்கோகிராட் மற்றும் வோரோனேஜ் பகுதிக்கு இடையில் 64 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
2022 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனில் இருந்து ரஷ்யா மீது நடத்தப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த ட்ரோன் தாக்குதல் இதுவாகும்.
இதற்கிடையில், குர்ஸ்க் எல்லையில் உக்ரைன் படைகள் வசம் இருந்த இரண்டுக்கும் மேற்பட்ட கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது.
ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்கள் ரஷ்யாவின் 14 பகுதிகளைத் தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
முந்தைய நாள் கியேவில் ரஷ்ய தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.