இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்திற்கு மர்ம நபர்களால் நேர்ந்த கதி

மாரவில பிரதேசத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு 08.00 மணியளவில் பஸ் மீது கற்கள் வீசப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் நீர்கொழும்பு போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பஸ் நீர்கொழும்பில் இருந்து குளியாபிட்டிய நோக்கி பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல் வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் கல் வீச்சில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.
பேருந்தின் மீது யார் கல் வீசினார்கள், என்ன காரணம் என்று இதுவரை தெரியவரவில்லை.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுபிடிக்க மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 57 times, 1 visits today)