எலான் மஸ்க் அறிமுகம் செய்யும் புதிய வசதி
X தள உரிமையானரான எலான் மஸ்க் கடந்த வாரங்களில் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்தார்.
‘பிரைவேட் லைக்ஸ்’ அம்சம் பயனர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக பிரத்யேக லைவ் ஸ்ட்ரீங் அம்சத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த அம்சம் கட்டணம் செலுத்தும் பிரீமியம் சந்தா பயனர்களுக்கு வழங்கப்படுவதாக கூறியுள்ளது. எனினும் இந்த அம்சம் எப்போது அறிமுகம் செய்யயப்படும் எனக் கூறவில்லை. மற்ற சமூக ஊடக தளம் போல் அல்லாமல் பேஸ்புக், யூடியூப், டிவிட்ச் போல் அல்லாமல் லைவ் ஸ்ட்ரீங் அம்சம் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கும் ஒரே தளமாக எக்ஸ் விளக்கும்.
Facebook, YouTube, Twitch மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் பயனர்களை இலவசமாக வீடியோ லைவ் ஸ்ட்ரீம் தொடங்க அனுமதிக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், X-ல் இணையும் புதிய பயனர்கள் போஸ்ட் பதிவிட குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் X-ல் சேர்ந்து 3 மாதத்திற்கு இலவமாக போஸ்ட் பதிவிடலாம் என்றும் கூறியது. X தளத்தில் சந்தா பெற 3 ஆப்ஷன்கள் உள்ளன.