இலங்கையுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக மோடி நம்பிக்கை
மூன்றாவது தடவையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, இலங்கையுடன் இணைந்து செயற்பட நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது வெற்றியின் பின்னர் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அவர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், தனது நெருங்கிய அண்டை நாடான இலங்கை, இந்தியாவுடனான தனது பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக பதிலளித்துள்ளார்.
இதனிடையே, மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, அடுத்த தவணைக்கான பதவிப் பிரமாணம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
அதன்படி தநரேந்திர மோடி இந்திய ஜனாதிபதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாகவும் இந்திய குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.