கராச்சியில் யாசகர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு
ரமலான் மாதத்தில் பாகிஸ்தானில் உள்ள சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து கராச்சிக்கு யாசகர்களின் வருகை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலைமை கராச்சியில் பல குற்றச்செயல்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
யாசகர்களின் அதிகரிப்பால் கராச்சியில் தெருக் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கராச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இம்ரான் யாகூப் மின்ஹாஸ் கூறுகையில், ரமலான் நோன்புப் பருவத்திற்காக பணம் சேகரிக்க 3,00,000 முதல் 4,00,000 தொழில்முறை யாசகர்கள் கராச்சிக்கு வருகிறார்கள்.
எனவே, வழக்கமான நடவடிக்கைகளால் குற்றங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
எனவே, குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில், மாநகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை அதிகரிக்க வேண்டும் என, பாதுகாப்புப் படையினர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரமலான் மாதத்தில் மட்டும் குறைந்தது 19 குடிமக்கள் கராச்சியில் தெருக் குற்றச் சம்பவங்களில் பலியாகி உள்ளனர்.
இவ்வருடம் திருட்டுக்கு எதிரான போராட்டத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஐ தாண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.