600 சிக்ஸர்களுடன் புதிய சாதனை படைத்த 600 பூரன்

நேற்றைய போட்டியில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரூ.21 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட பூரன், வெறும் 30 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தபோது ஏழு அபார சிக்ஸர்கள் மற்றும் ஆறு பவுண்டரிகளை விளாசினார். குறிப்பாக, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் 13வது ஒவரில் (ஒரே ஓவரில்) 0 ,6 ,6, 6, 6 4, அடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
பூரன் 385 டி20 போட்டிகளில் விளையாடி 600 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக இதுவரை 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 65 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதன் மூலம், 2013 ஆம் ஆண்டு தனது டி20 அறிமுகமான பூரன், தனது 385வது போட்டியில் 600 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
இவருக்கு முன், டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கெய்ல் வைத்திருக்கிறார். அவர் தனது 17 ஆண்டுகால டி20 வாழ்க்கையில், கெய்ல் 463 போட்டிகளில் விளையாடி 1056 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கீரோன் பொல்லார்ட் 695 போட்டிகளில் 908 சிக்ஸர்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் 539 போட்டிகளில் 733 சிக்ஸர்கள் அடித்து 3வது இடத்தில் உள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:
கிறிஸ் கெய்ல்: 1056 சிக்ஸர்கள்
கீரோன் போலார்டு: 908 சிக்ஸர்கள்
ஆண்ட்ரே ரஸ்ஸல்: 733 சிக்ஸர்கள்
நிக்கோலஸ் பூரன்: 606 சிக்ஸர்கள்
அலெக்ஸ் ஹேல்ஸ் : 552 சிக்ஸர்கள்