2024 YR4 விண்கல் சந்திரனில் மோதும் அபாயம் – விஞ்ஞானிகள் தகவல்

2024 YR4 என அழைக்கப்படும் விண்கல் மீதான விஞ்ஞானிகளின் கவனம் மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறுகோள், 2032ஆம் ஆண்டு பூமியைத் தாக்கலாம் என ஆரம்பத்தில் கருதப்பட்டது.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள், அதன் தாக்கும் சாத்தியம் 3.1% ஆக உயர்ந்தது. இதன் காரணமாக, அது அந்த நேரத்தில் மிக அதிக ஆபத்துடன் கூடிய சிறுகோளாக வகைப்படுத்தப்பட்டது.
இப்போது கிடைத்துள்ள புதிய கணிப்புகள், அந்த விண்கல் பூமியைத் தாக்க வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனினும், விஞ்ஞானிகள் தற்போது அந்த விண்கல் 2032 இறுதியில் சந்திரனைத் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளனர்.
நாசாவின் தகவலின்படி, சந்திரனில் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டால், அதன் மேற்பரப்பிலிருந்து நுண்மையான தூசியும் துகள்களும் வெளி வீசப்படலாம். அவை பூமியின் மேற்பரப்பை எட்டக்கூடியவையாக இருக்கலாம்.
இருப்பினும், இந்தச் சிறுகோள் பூமியை நேரடியாக பாதிக்காததால், மக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லையென நாசா தெரிவித்துள்ளது.
விஞ்ஞானிகள் கூறுவதாவது, இந்தக் கோளாறான சந்திர மோதல் பொதுமக்கள் தங்கள் வாழ்நாளில் நேரில் காணக்கூடிய ஒரு அபூர்வ நிகழ்வாக இருக்கலாம்.