இந்தியப் பிரதமரின் அமெரிக்கப் பயணம் இருதரப்பு உறவின் முக்கியத்துவம் பற்றியது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் சீனாவைப் பற்றியது அல்ல என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூலோபாய தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இந்த விஜயம் இந்திய மக்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் முக்கியத்துவம் பற்றிய செய்தியை அனுப்புவதாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு பற்றியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. […]