பாகிஸ்தானில் உச்ச கட்டத்தை எட்டிய பொருட்களின் விலை – உணவை மாற்றிய மக்கள்
பாகிஸ்தானில் பெட்ரோலியத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதுடன், பருப்பு, நெய், எண்ணெய், காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட அனைத்து சில்லறை பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இது நாட்டின் மோசமான பொருளாதார நிலைமையை பிரதிபலிப்பதாக அந்நாட்டு பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு விலை உயர்வு காரணமாக உலர் பழங்கள் விலைவாசி உயர்வால் மக்களுக்கு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அனைத்து வயதினரும் மத்தியில் பிரபலமான உலர் பழங்களில் ஒன்றான நிலக்கடலை, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கிலோ 800 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
புதிய வரிகள், சுங்க வரிகள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் ஆகியவை ஒட்டுமொத்தமாக உலர் பழங்களின் விலை உயர்வுக்கு பங்களித்துள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கு முன், அரசு அலுவலகங்கள், கடைகள், தெருக்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மக்கள் கடலை, கருப்பட்டி போன்றவற்றை சாப்பிட்டு வந்தனர்.
ஆனால் இப்போது பல குடும்பங்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இரவு வரை சூப் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இது தவிர அன்றாட அத்தியாவசிய உணவுகளான பட்டாணி, தானியங்கள், நெய், தயிர், இறைச்சி, முட்டை போன்றவற்றின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.