ஹமாஸ் ஒப்புக்கொள்ளாவிட்டால் காஸா அழிக்கப்படும்: இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல் காஸாவை அழித்துவிடும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் சூளுரைத்துள்ளார்.
ஹமாஸ் தனது ஆயுதங்களை கைவிடவும், எஞ்சியுள்ள பிணையாளிகளை விடுவிக்கவும் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இஸ்ரேலின் நிபந்தனைகள்படி மட்டுமே போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர் வலியுறுத்தினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, காஸாவில் எஞ்சியுள்ள அனைத்து பிணையாளிகளையும் விடுவிக்க உடனடி பேச்சுவார்த்தைக்காக உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, இந்த பேச்சு வெளியாகியுள்ளது.
காஸாவைக் கைப்பற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 60,000 இஸ்ரேலியப் படைவீரர்கள் இந்த வாரம் ராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
(Visited 4 times, 4 visits today)