ஸ்மார்ட்போன் பயன்பாடு – சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – உலகளாவிய ஆய்வு எச்சரிக்கை

ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் உயிர் மாய்க்கும் எண்ணங்களுக்குள்ளாகும் அபாயம் அதிகமாக இருப்பதாக புதிய உலகளாவிய ஆய்வொன்று எச்சரித்துள்ளது.
குறிப்பாக 13 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது அவர்களது மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
குழந்தைகளின் மன நலத்தை பாதுகாக்க இது முக்கியக் கட்டாயமாகும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்புகள், ஸ்மார்ட்போன்களின் விளைவுகள் குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகமெங்கும் தீவிர விவாதத்தை எழுப்பியுள்ளன.
குழந்தைகளின் நலனுக்காக, அவர்களது மன ஆரோக்கியத்தை முதன்மையாகக் கருதி, ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்த தெளிவான வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.