ஸ்பெயினில் வைட்டமின் டி மாத்திரைகள் எடுத்த 16 பேர் மருத்துவமனையில் – மக்களுக்கு எச்சரிக்கை

ஸ்பெயினில் உள்ள பலேரிக் தீவுகளில், தவறான குறைபாடுள்ள வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்த 16 பேர் ஹைப்பர்வைட்டமினோசிஸ் டி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஆன்லைனில் வாங்கிய மாத்திரைகள் தான் காரணம் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
வைட்டமின் டி அதிகமாக எடுத்தால், உடலில் கால்சியம் சேர்ந்து சிறுநீரக பாதிப்பு, எலும்பு அடர்த்தி இழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் போதுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஸ்பானிஷ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் மருத்துவர்களால், பரிந்துரைக்கப்பட்ட அளவை மீறக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் ஆலோசனைப்படி, பெரியவர்கள் நாளைக்கு 10 mcg வைட்டமின் டி எடுத்தால் போதுமானது; 100 mcg-ஐ விட அதிகம் எடுத்தல் ஆபத்தாகும்.
உடல்நலம் மேம்பட மாத்திரைகள் எடுத்தாலும், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்தல் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.