விரைவான உடல் எடை இழப்பு – நிபுணர் எச்சரிக்கை

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான், தனது கடுமையான உழைப்பிற்கு பின்னர் சுமார் 17 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இதனை அவர் இரண்டு மாதங்களில் செய்துள்ளார்.
26 வயதாகும் சர்பராஸ் கான் கடந்த சில காலமாக அவரது உடல் எடை குறித்து பல விமர்சனங்களை எதிர்கொண்டார். அவர் தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் துருதிஷ்டவசமாக தேர்வு ஆகவில்லை.
இந்த நிலையில், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உடல் எடை குறைப்பில் கவனம் செலுத்தி தற்போது 17 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.
நிபுணர் எச்சரிக்கை
இவரது உடல் எடை இழப்பு பயணம் பலருக்கும் உத்வேகத்தை அளிக்கலாம். இருப்பினும் இரண்டு மாதங்களில் ஏற்படும் கடுமையான எடை இழப்பு விகிதத்தை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எடை இழப்பு தொடர்பாக மும்பையை சேர்ந்த எடை மேலாண்மை நிபுணர் டாக்டர் ரிஷி மல்ஹோத்ரா பேசுகையில், விரைவான எடை இழப்பு விரைவான பலன்களை தரும் என்றாலும், அதை சரியாக கையாள வேண்டும். இல்லாவிட்டால், அது தசை நிறை இழப்பு, ஊட்டச்சத்து சமநிலை மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்.
சரியாக கையாள வேண்டும்
உணவு மற்றும் உடற்பயிற்சியில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் வளர்சிதை மாற்ற விகிதம், ஹார்மோன் சமநிலை மற்றும் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை விரைவாக சீர்குலைக்கலாம். அனைவரின் உடலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு வேலை செய்யும் சிலருக்கு தீங்கு விளைவிக்கலாம். எதிர்ப்பு பயிற்சிகள் இல்லாமல், உங்கள் உணவில் போதுமான புரதம் இல்லாமல், நீங்கள் கொழுப்புக்கு பதிலாக தசையை பயன்படுத்த தொடங்குவீர்கள்.
உணவை பற்றி அதிகம் சிந்திக்காதீர்கள். நீரேற்றம் மிகவும் முக்கியமானது. நச்சு நீக்கம் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கு தண்ணீர் குடிங்கல். உடல் எடை இழப்பு சரியாக கையாளாவிட்டால், முடி உதிர்தல், செரிமான பிரச்சனை உள்ளிட்டவைகள் எற்படலாம் என டாக்டர் ரிஷி மல்ஹோத்ரா எச்சரிக்கிறார்.